தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட குஷ்புவின் மகள்.. அழகில் அம்மாவையே மிஞ்சிவிட்டார்!

சென்னை: இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே ரசிகர்கள் கோவில் கட்டினார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களுடன் குஷ்பு ஜோடி போட்டு நடித்துள்ளார். சினிமா அரசியல் என பிஸியாக இருக்கும் குஷ்பு தனது மகளுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

நடிகை குஷ்பு: கொண்டையில் தாழம்பூ...கூடையில் வாழப்பூ... நெஞ்சிலே என்னப்பூ குஷ்பூ.. என்ற பாட்டு கேட்டு ஆட்டம் போடாத 90ஸ் கிட்டுகளே இருக்க முடியாது. 90 கால கட்டத்தில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு . சினிமாவில் பீக்கில் இருந்தபோதே இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார் குஷ்பு.

kushboo sundar c photos

சினிமாவில் ஆக்டிவ்: இவர், ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் மீண்டும் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, வம்சி இயக்கத்தில்உ உருவான விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தனது கணவர் இயக்கிய அரண்மனை 4 படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அதிரடியான சாமி பாடலுக்கு, சிம்ரனுடன் இணைந்து கலக்கலாக ஆட்டம் போட்டு இருந்தார்.

அம்மாவின் அழகு அப்படியே: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தனது மகளின் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் அம்மாவிற்கு தப்பாத பெண்ணு என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வளவு அழகாக இருக்கிறார் குஷ்புவின் மகள். அதைத்தொடர்ந்து அந்த போட்டோவிற்கு கேப்ஷனாக, உங்கள் குழந்தைக்கு நிறைய கற்றுக்கொடுங்கள், அவர்கள் வளர வேண்டும் மற்றும் வெற்றி பெற வேண்டும். அவர்கள் இறக்கைகளை விரிக்கவும், உயரமாக பறக்கவும் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு மலை போல் லைக்குகள் குவிந்து வருகிறது.

குஷ்பு வீட்டு ஹீரேயின்: அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய குஷ்பு, மகள் அவந்திக்காவிற்கு இப்போது தான் 24 வயது ஆகிறது, அவருக்கு இப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. அவர் சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் நல்ல வாய்ப்புக்காக காத்து இருக்கிறார் என்றார்.செய்தியை பார்த்த நெட்டிசன்கள் குஷ்பூ வீட்டில் கூடிய விரைவில் ஒரு ஹீரோயினை எதிர்பார்க்கலாம் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X