ஸ்ரீவித்யாவிற்கு கமல் தான் மூச்சு.. சாகுறதுக்கு 2நாள் முன் கதறி அழுதாங்க.. குட்டி பத்மினி பேட்டி!
சென்னை: பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் ரசிகர்களின் இதயங்களில் இன்னும் உயிர்ப்புடன் தான்இருக்கிறார். அவரின் நடிப்பை விட, அவரின் மான் போன்ற கண் அசைவு ஆயிரம் அர்த்தத்தை சொல்லும். 80ஸ், 90ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. கேன்சரால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா குறித்து குட்டி பத்மினி மனம் திறந்து பல விஷயங்களை கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீவித்யா கமலை உருகி உருகி காதலித்து வந்தார், ஆனால் இவர்களின் காதலுக்கு அம்மா முட்டுக்கட்டை போட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர். கமலை பிரிந்த ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்பவரை காதலித்தார். இவர்களுடைய காதலுக்கு ஸ்ரீவித்யா வீட்டில் எதிர்ப்பு எழுந்ததால், வீட்டை எதிர்த்துக்கொண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், இந்த வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்பட்டதால், ஜார்ஜை விவாகரத்து செய்து விட்டு, தனிமையில் வாழ்ந்த வந்த ஸ்ரீவித்யா புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.

அண்மையில், பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், நான் 19 வயதில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்தேன். அப்போ அந்த படத்தில் நடிக்கும் போது நான் திறமையானவன் என்பதை எனக்கு உணர்த்தியது ஸ்ரீவித்யா தான். அவங்க எனக்கு தோழி மட்டுமல்ல எனக்கு காதலியும்தான் அதில் எந்த சந்தேகமும் இல்ல. அந்த படம் மூலமாக எங்களுக்கு ஏற்பட்ட காதல் கடைசி வரைக்கும் இருந்தது. அது கல்யாணத்தில் முடியனும் என்றெல்லாம் அவசியம் இல்லை என்று பேசி இருந்தார். இந்த பழைய வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
தெய்வீகமான காதல்:இதுகுறித்து பழம் பெரும் நடிகை குட்டி பத்மினி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கமலை ஸ்ரீவித்யா காதலிக்கும் போது, கமல் வாணி கணபதியை காதலித்துக் கொண்டு இருந்தார். அவங்க மட்டுமில்ல இன்னும் சில நடிகைகளும் கமலை காதலித்தார்கள். ஏன் என்றால் அன்றைக்கு இருந்த காலகட்டத்தில், ரொம்ப அழகா, அறிவானவராக, கலகலப்பாக பேசக்கூடிய ஒருவராக கமல் இருந்தார். இதையாருமே மறுக்கேவே முடியாது. இன்றளவுக்கும் அவர் அப்படியேத்தான் இருக்கிறார். இதனால், இவருடன் சேர்ந்து நடித்த நடிகைகள் இவரை காதலிக்க தொடங்கினார்கள். ஸ்ரீ வித்யாவிற்கு நாட்டியம், பாட்டு தெரியும், அதே போல கமலும் இதில் திறமையானவர் என்பதால், இருவரின் காதலுக்கும் இது ஒரு பாலமாக அமைந்தது. கமல், ஸ்ரீ வித்யா காதல் ரொம்ப ஆழ்ந்த காதல், தெய்வீக காதல் தான்.
சாகுறதுக்கு 2 நாள் முன்னாடி: அவங்க இறப்பதற்கு இரண்டு நாள் முன் சந்தித்து பேசினேன். நான் அவங்களை வைத்து ஏற்கனவே ஒரு சீரியல் தயாரித்து இருக்கிறேன். இரண்டாவது சீரியலுக்காக நான் ஸ்ரீ வித்யாவிடம் போனில் பேசினேன். அப்போது அவர் கொச்சிக்கு வா என்று அழைத்தார். நான் கொச்சின் போன போது, ஹாஸ்பிடல்ல இருந்தாங்க, என்ன ஆச்சு அக்கா என்று கேட்டேன். அப்போ அவங்க எனக்கு கேன்சர் கடைசி ஸ்டேஜ்ல இருக்கு, இன்னும் இரண்டு மூனு நாளுதான் நான் உயிரோடு இருப்பேன் என்று சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று கையை புடிச்சிட்டு கதறி அழுதார்.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்: அப்போது, ஸ்ரீவித்யா கமல் பற்றி பேசினார், அவர் நாளைக்கு வரேனு சொல்லி இருக்காரு என்றார். நானும் ஸ்ரீவித்யா அக்காவும் மனம் திறந்து பல விஷயங்களை பேசினோம். அந்த விஷயத்தை வெளியில் சொல்லமுடியாது. நான் அழுது, அவங்க அழுது அந்த நேரமே ரொம்ப கஷ்டமான நேரமாக இருந்தது. நான் உங்க கூடவே இருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், ஹாஸ்பிடல்ல நைட் தங்க விடமாட்டாங்க என்று சொல்லி என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். நான் பார்த்துவிட்டு வந்த இரண்டு நாளிலேயே ஸ்ரீ வித்யா அக்கா இறந்துவிட்டார்கள். என் வாழ்க்கையில மறக்க முடியாத சம்பவம் இது என்று குட்டி பத்மினி கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











