Kanaka - கனகா என்னை ஏமாத்திட்டார்.. போனப்போ ஒன்னு சொன்னார்.. இப்போ நோ ரெஸ்பான்ஸ்.. குட்டி பத்மினி விரக்தி
சென்னை: Kanaka (கனகா) கனகா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று குட்டி பத்மினி பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகை கனகா 80கள் இறுதியில் சினிமாவில் நுழைந்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் அறிமுகமான கரகாட்டக்காரன் படம் மெகா ஹிட்டானதை அடுத்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. தனது தாயான தேவிகா போலவே கனகா சினிமாவுக்குள் பறக்க ஆரம்பித்தார். அதன்படி ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

தாயார் மரணம்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அறிமுகமாக பல படங்களில் நடித்த கனகாவுக்கு வாழ்க்கையில் ஒரு இடி இறங்கியது. அது என்னவென்றால் அவரது தாய் தேவிகாவின் மரணம். தேவிகாதான் கனகாவுக்கு எல்லாமே. அதனால் தேவிகா உயிரிழந்ததை கனகாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதற்கிடையே தனது தந்தை தேவதாஸுடனும் மோதல் ஏற்பட்டது.
காதல் தோல்வி?: அதுமட்டுமின்றி தன்னுடைய மேனேஜர் தன்னை ஒருதலையாக காதலித்ததை கனகா விரும்பவில்லை. அதனால் அந்த மேனேஜர் தற்கொலை செய்துகொண்டார். அதுவும் அவரது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும்; கலிஃபோர்னியாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் பாதியில் முடிந்தது என பல பிரச்னைகளை அவர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.
தனிமையில் கனகா: நிலைமை இப்படி இருக்க கனகா தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் வீட்டில் அவர் மட்டுமே வசித்துவருகிறார். அவர் சினிமா சார்ந்த யாரையுமே சந்திப்பது இல்லை. இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் அவரை சந்தித்தார். அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.
குட்டி பத்மினி: தனிமைப்படுத்திக்கொண்ட கனகா பல வருடங்களாக சினிமாவை சேர்ந்த யாரையும் சந்திக்காமல் இருந்தார். அவர் குறித்து பலரும் பேட்டி அளித்து வந்தாலும் கனகா மட்டும் வெளியே வராமல் இருந்தார். இந்த சூழலில் நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் கனகாவை சந்தித்தார். அப்போது கனகாவும் அவர் முத்தம் கொடுக்கும்படியான புகைப்படத்தையும் வெளியிட்டார். புகைப்படத்தை பார்த்த பலரும் கனகாவை கண்டு சந்தோஷம் அடைந்தனர்.
ஏமாற்றிவிட்டார்: கனகாவை சந்தித்த பின் ஒரு யூட்யூப் சேனலுக்கு குட்டி பத்மினி அளித்த பேட்டியில் கனகா பேட்டி கொடுக்க தயாராக இருப்பதாகவும் விரைவில் அவர் ஒரு பேட்டி கொடுப்பார் என்றும் தெரிவித்திருந்தார். அதனையடுத்து கனகாவின் பேட்டி எப்போது வரும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தனர்.
இந்நிலையில் கனகாவின் பேட்டி குறித்து பேசிய குட்டி பத்மினி, "நான் கனகாவை சந்தித்தபோது அவரது ஃபோனில் வாட்ஸ் அப்பே கிடையாது. நான் சென்றுதான் அதனை இன்ஸ்டால் செய்துகொடுத்தேன். அவரை சந்தித்துவிட்டு வந்த பிறகு அவர் பேட்டி அளிப்பது தொடர்பாக கனகாவை தொடர்புகொண்டேன். ஆனால் அவர் எனது ஃபோனை எடுக்கவில்லை. அதற்கு பிறகு நிறைய மெசேஜ்களை அனுப்பினேன்.
ரிப்ளை இல்லை: ஆனால் அதற்கும் அவர் ரிப்ளை செய்யவில்லை. எனக்கு பெரிய ஏமாற்றம். நான் அவரை சந்தித்தபோது ஒரு காஃபி ஷாப்புக்கு சென்றோம். அப்போது அவர் வீட்டுக்கு வாங்க என்றுகூட என்னை அழைக்கவில்லை. கனகா யாரையுமே சந்திக்க தயாராக இல்லை என்பது எனக்கு புரிந்துவிட்டது. யாரிடமாவது பழகினால் ஏமாந்துவிடுவோமோ என்று பயப்படுகிறாளா என்பதும் தெரியவில்லை. அவர் ஒத்துழைத்தால்தான் என்னால் அவருக்கு உதவி செய்ய முடியும் . அவரை பேட்டி எடுக்க முடியாமல் போனது குறித்து நான் வருத்தப்படுகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











