Actress Laila: GOAT படத்தில் விஜய்யின் லுக்.. நடிகை லைலா கொடுத்த வேற லெவல் அப்டேட்!
சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் திரிஷா, மறைந்த நடிகர் விஜயகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கேமியோ கேரக்டர்களில் இணைந்துள்ளனர்.
இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகை லைலா இணைந்துள்ளார். படத்தில் அவரது கேரக்டர் மிகவும் அழுத்தமாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் குறித்து அவர் எந்தவித கருத்துக்களையும் வெளியிடாமல் தொடர்ந்து மௌனம் காத்துவந்த நிலையில், தற்போது அவர் படம் குறித்தும் படத்தில் விஜய் குறித்தும் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இலங்கையில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து முடிந்த சூழலில் சில தினங்கள் சென்னையிலும் சூட்டிங் நடத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன்னதாகவே நடிகர் விஜய் தன்னுடைய போர்ஷன்களை படத்தில் நிறைவு செய்து விட்டார்.
லைலா ரீ-என்ட்ரி: மேலும் விஜய் தன்னுடைய டப்பிங் வேலைகளையும் பூர்த்தி செய்த நிலையில் தற்போது தன்னுடைய அடுத்த பட வேலைகள் மற்றும் அரசியல் பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் கோட் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் அல்லது டீசர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து தற்போது நடிகை லைலா பேசியுள்ளார். படத்தில் லைலா முக்கியமான கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு அவர் மீண்டும் தன்னுடைய ரீ-என்ட்ரியை கோட் படத்தின்மூலம் செய்துள்ளார்.
லைலா இன்டர்வியூ: இந்நிலையில் படத்தில் விஜய்யின் லுக் இதுவரை எந்த நடிகரும் மேற்கொள்ளாத வகையில் இருக்கும் என்று நடிகை லைலா தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். விஜய் மிகவும் சிறப்பான நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்று குறிப்பிட்டுள்ள லைலா, இந்த படத்தில் அவர் இதுவரை ஏற்காத கேரக்டரை ஏற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சூர்யா, சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை லைலா. இவர் நீண்ட காலங்களாக தன்னுடைய ரீ-என்ட்ரியை கோலிவுட்டில் திட்டமிட்ட சூழலில் தற்போது விஜய்யுடன் இணைந்துள்ளது குறித்து அவரது ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்நேகா பேட்டி: எப்போதும் சிறப்பான சிரிப்பை உதிர்த்து ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை லைலா, கோட் படத்தில் எந்த மாதிரியான கேரக்டரில் நடித்திருப்பார் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்பா -மகன் என இரு வேறு கேரக்டர்களில் நடிகர் விஜய் இந்த படத்தில் நடித்துள்ளார். கோட் படத்தின் சூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவடைந்த நிலையில் தற்போது ஒவ்வொரு நடிகராக, கோட் படம் குறித்து அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்யின் அனைத்து காட்சிகளிலும் இணைந்து தான் நடித்துள்ளதாக நடிகை ஸ்நேகா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது லைலாவும் விஜய்யின் கேரக்டர் குறியுது பேசியுள்ளது ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











