அதே குழந்தை சிரிப்பு.. மிரர் செல்ஃபி எடுத்த நடிகை லைலா.. மாறவே இல்லை என கொண்டாடும் ரசிகாஸ்!
சென்னை: நடிகை லைலா ஷேர் செய்துள்ள மிரர் செல்பி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை லைலா. தொடர்ந்து தெலுங்கியில் பல படங்களில் நடித்தார்.
பின்னர் மலையாள மொழியிலும் தடம் பதித்த லைலா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிஸியானார்.

பல வெற்றிப்படங்கள்
தமிழில் கள்ளழகர் படத்தின் மூலம் அறிமுகமான லைலா, முதல்வன், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், அள்ளி தந்த வானம், நந்தா, உன்னை நினைத்து, பிதா மகன், கம்பீரம், உள்ளம் கேட்குமே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

போட்டோக்கள்
தற்போது அலைஸ் படத்திலும் நடித்து வருகிறார் லைலா. சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் லைலா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள லைலா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

மிரர் செல்பி
இந்நிலையில் நடிகை லைலா செல்பி ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் கறுப்பு ஷர்ட் அணிந்துள்ள லைலா, தனது ட்ரேட் மார்க் சிரிப்புடன் மிரரில் செல்பி எடுத்துள்ளார்.

கொஞ்சமும் மாறவில்லை
லைலாவின் இந்த செல்பியை பார்த்த நெட்டிசன்கள், அப்படியே இருக்கிறீர்கள், கொஞ்சமும் மாறவில்லை என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். நடிகை லைலா ஈரானை சேர்ந்த தொழிலதிபர் மெஹ்தியை கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இரண்டு மகன்கள்
திருமணத்திற்கு முன்பு 8 ஆண்டுகள் மெஹ்தியுடன் டேட்டிங்கில் இருந்தார் லைலா. நிச்சயதார்த்தம் முடிந்து 4 ஆண்டுகள் கழித்தே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 12 மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











