பிதாமகன் பட வசனத்தில் வெளிவந்த மீமை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய லைலா!
சென்னை : தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
திரைப் பிரபலங்கள் மருத்துவர்கள் என அனைவரும் கொரோனா பரவலை பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து கொடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகை லைலா பிதாமகனில் தான் நடித்த காமெடி வசனத்திலிருந்து வெளிவந்த மீமை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

தனித்துவமான நடிகை
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகையாக உள்ளவர் லைலா. க்யூட்டா நடிப்பு மட்டுமல்லாமல் கன்னக்குழி அழகி பல ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர் இப்பொழுது குடும்பத்தலைவி பொறுப்பில் உள்ளார்.

தீனா
விஜயகாந்தின் கள்ளழகர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை லைலா அதைத் தொடர்ந்து முதல்வன், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், அள்ளித்தந்த வானம், நந்தா, பிதாமகன், கண்ட நாள் முதல், உள்ளம் கேட்குமே உள்ளிட்ட எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில்
குறிப்பாக பிதாமகனில் இவரது கதாபாத்திரம் இன்றளவும் ரசிக்கக் கூடிய வகையில் இருக்க இந்த அற்புதமான நடிகையை மீண்டும் தமிழ் சினிமாவில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்க ஏற்கனவே சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலையை காட்டிக் கொண்டு வரும் லைலா இப்பொழுது அலிஸ் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மாஸ்க் அணிய வேண்டும்
கொரோனா விழிப்புணர்வு பற்றி பிரபலங்கள் பலரும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வர நடிகை லைலா சற்று வித்தியாசமாக பிதாமகன் திரைப்படத்தில் தான் நடித்த காமெடி காட்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கொரோனா விழிப்புணர்வு மீமை ரசித்து விட்டு அதை பகிர்ந்தும் உள்ளார்.


Click it and Unblock the Notifications











