மோகன்லாலுடன் இணையும் லஷ்மி மஞ்சு... மான்ஸ்டர் படத்தில் ஜோடியாகிறார்!

திருவனந்தபுரம் : நடிகை லஷ்மி மஞ்சு தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.

Recommended Video

Dance Master Cool Jayanth காலமானார் | Kadhal Desam, Priyamanaval

தமிழில் காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மோகன்லால் நடிக்கவுள்ள புதிய படமான மான்ஸ்டரில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மான்ஸ்டர் படம்

மான்ஸ்டர் படம்

நடிகர் மோகன்லால் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் மான்ஸ்டர் என்ற படம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக இந்தப் படம் உருவாகவுள்ளது.

வைசாக் இயக்கம்

வைசாக் இயக்கம்

சமீபத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தை வைசாக் இயக்கவுள்ளார். படத்தை ஆண்டனி தயாரிக்கவுள்ளார். புலனாய்வு த்ரில்லர் படமாக இந்தப் படம் உருவாகவுள்ளது. மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

மரக்கார் படம்

மரக்கார் படம்

அவரது நடிப்பில் மரக்கார் படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் புக்கிங்குகள் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் மோகன்லால்.

லஷ்மி மஞ்சு ஜோடி

லஷ்மி மஞ்சு ஜோடி

இதனிடையே இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் நடிகை லஷ்மி மஞ்சு. டோலிவுட்டின் பிசியான நடிகையான லஷ்மி மஞ்சு, ஒரு டிவி தொகுப்பாளினியாகவும் செயல்பட்டு வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் கடல் படத்தின்மூலம் அறிமுகமானார்.

காற்றின் மொழி படம்

காற்றின் மொழி படம்

ஜோதிகாவுடன் இணைந்து காற்றின் மொழி படத்தில் நடித்துள்ளார். ஜோதிகா வேலை செய்யும் டிவி சேனலின் உயரதிகாரியாக இவர் படத்தில் வருவார். அந்தப் படத்தில் இவரது நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து படங்களில் இவர் நடித்து வருகிறார்.

மான்ஸ்டர் படத்தில் நாயகி

மான்ஸ்டர் படத்தில் நாயகி

இந்நிலையில் மோகன்லால் தற்போது நடிக்கவுள்ள மான்ஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் லஷ்மி மஞ்சு. இந்தப் படத்தில் இன்வெஸ்டிகேஷன் அதிகாரியாக நடிக்கவுள்ளார் மோகன்லால். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிங்காக காட்சியளிக்கிறார் மோகன்லால். இவருடன் லஷ்மி மஞ்சு நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் எப்போதும் பிசியாக காணப்படுகிறார் லஷ்மி மஞ்சு. தொடர்ந்து பல போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ரசிகர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். இவரது அப்டேட்டுகளுக்காக இவரது ரசிகர்கள் காத்திருக்கும் சூழல் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X