இது ஆரம்பம்தான்... ஹாலிவுட் படத்தில் கமிட்டான சமந்தாவுக்கு கலக்கலாய் வாழ்த்து கூறிய பிரபல நடிகை!

சென்னை: ஹாலிவுட் படத்தில் கமிட் ஆகியுள்ள நடிகை சமந்தாவுக்கு பிரபல நடிகை கலக்கலாய் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இரு மொழிகளிலும் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா.

நடிகை சமந்தாவும் அவரது காதல் கணவர் நாக சைதன்யாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களின் விவாகரத்தை அறிவித்தனர். அதனை தொடர்ந்து இருவரும் தங்களின் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ்

அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ்

தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் நடிகை சமந்தா, வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது முதல் ஹாலிவுட் படமான அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ் படத்தில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் பெண்ணாக சமந்தா

தமிழ் பெண்ணாக சமந்தா

பிரபல ஹாலிவுட் இயக்குநரான பிலிப் ஜான் இந்தப் படத்தை இயக்குகிறார். அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ், என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், இந்திய எழுத்தாளர் டைமெரி என் முராரி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட உள்ளது. ஒரு துப்பறியும் நிறுவனத்தை நடத்தும், இருபால் தமிழ் பெண்ணாக சமந்தா நடிக்க உள்ளார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு..

12 ஆண்டுகளுக்கு பிறகு..

ஹாலிவுட் படத்தில் கமிட்டானது குறித்து நடிகை சமந்தா தனது டிவிட்டர் அண்மையில் அறிவித்தார். அதாவது "ஒரு புதிய உலகம். நான் கடைசியாக 2009 இல் யே மாயா சேசேவுக்காக ஆடிஷன் செய்தேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஆடிஷனில், நான் அதே பதட்டத்தை உணர்ந்தேன். உங்களுக்கு மிகவும் பிடித்தமான 'டவுன்டன் அபே' தொடரின் இயக்குனரான, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, BAFTA விருது பெற்ற இயக்குநரின் ஆடிஷனுக்கு நீங்கள் வருவது தினமும் இல்லை என்று நினைக்கிறேன். என்னை தேர்வு செய்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி பிலிப்ஜான். இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியாது.. என கூறியிருந்தார்.

நீங்களாகவே வாழுங்கள்..

நீங்களாகவே வாழுங்கள்..

மேலும் பிலிப் ஜானுடன் இருக்கும் போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்தார் சமந்தா. இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு பிரபல தெலுங்கு நடிகையான லக்ஷ்மி மஞ்சு வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பான அவரது இன்ஸ்டா பதிவில், "நீ போ பெண்ணே! இது ஆரம்பம்தான். சர்வதேசத் திரையிலும் நீங்கள் ஒளிரும் வரை என்னால் காத்திருக்க முடியாது. நீங்களாகவே வாழுங்கள்.. என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

பெண்களுக்கு கல்யாணம் முடியவில்லை | Samantha கொடுத்த Strong Advice
பாலிவுட் படத்தில்..

பாலிவுட் படத்தில்..

லட்சுமி மஞ்சுவின் இந்த பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை சமந்தா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். "உங்கள் ஆதரவிற்கு நன்றி என் அன்பு என்று பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா, டாப்ஸி தயாரிக்கும் பாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X