டான்ஸ் பிராக்டீஸின் போது விழுந்து வாரிய லக்ஷ்மி மேனன்..தீயாய் பரவும் வீடியோ..அதிர்ச்சியில் ரசிகர்கள்

சென்னை: பிரபல நடிகையான லக்ஷ்மி மேனன் நடனம் ஆடும் போது விழுந்து வாரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை லக்ஷ்மி மேனன். மலையாள படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்த அவர் தமிழில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து சுந்தரப்பாண்டியன், குட்டிப்புலி, பாண்டியாநாடு, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

கடைசியாக றெக்க

கடைசியாக றெக்க

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார் லக்ஷ்மி மேனன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் றெக்க. அவரது நடிப்பில் உருவான சிப்பாய் படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

வெயிட் போட்டதால்

வெயிட் போட்டதால்

2016ஆம் ஆண்டுக்கு பிறகு லக்ஷ்மி மேனன் நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவர் ஓவர் வெயிட் போட்டதால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதாக தகவல் வெளியானது.

வீட்டில் நடனம்

வீட்டில் நடனம்

அதோடு அவர் டான்ஸ் பயிற்சியளிப்பதாகவும் தகவல் பரவியது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனனின் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது நடிகை லக்ஷ்மி மேனன் வீட்டில் பரதநாட்டியம் பயிற்சி செய்கிறார்.

வழுக்கி விழுந்தார்

அப்போது ஆடிக்கொண்டிருக்கும் போதே நடிகை லக்ஷ்மி மேனன் கால் வழுக்கி கீழே விழுந்து விடுகிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லக்ஷ்மி மேனன் மிகவும் சிக்கலான கடினமான நடன ஸ்டண்ட் வீட்டில் முயற்சி செய்யாதீர்கள். கடைசி வரை பாருங்கள். தரையில் தண்ணீர் இருந்ததை கவனிக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X