Lakshmi menon: காமெடி நடிகருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்.. கிராமத்து பின்னணியில் உருவாகும் படம்!

சென்னை: நடிகை லட்சுமி மேனன் கும்கி படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

தொடர்ந்து ஒரு கட்டத்தில் தான் படிப்பில் கவனம் செலுத்தப் போவதாக கூறி, திரைத்துறைக்கு டாடா காட்டிவிட்டு சென்றவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார்.

Actress Lakshmi menon going to join with Comedy actor Yogi babu as lady lead

புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் நடித்த லட்சுமி மேனனுக்கு அதிகமான பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார்.

நடிகை லட்சுமி மேனன்: நடிகை லட்சுமி மேனன் தமிழில் கும்கி படம் மூலம் அறிமுகமானவர். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவும் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் லட்சுமி மேனனுக்கு மட்டுமில்லாமல் விக்ரம் பிரபுவிற்கும் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தொடர்ந்து சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார் லட்சுமி மேனன்.

முன்னணி நடிகை: சசிக்குமார், விஷால், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவந்த நிலையில், தான் படிப்பில் கவனம் செலுத்தப் போவதாக கூறி, சினிமாவிலிருந்து விலகினார் லட்சுமி மேனன். தமிழ், மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வந்த லட்சுமி மேனனின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார் லட்சுமி மேனன்.

லட்சுமி மேனன் ரீ-என்ட்ரி: இதனிடையே மீண்டும் நடிக்கவந்த லட்சுமி மேனன், புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த ரீ -என்ட்ரி படத்திலும் மீண்டும் விக்ரம் பிரபுவிற்கே ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக இல்லாத நிலையில், சமீபத்தில் பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

யோகிபாபுவுடன் புதிய படத்தில் ஜோடி: இதனிடையே தற்போது நடிகர் யோகி பாபுவிற்கு ஜோடியாக புதிய படத்தில் லட்சுமி மேனன் கமிட்டாகவுள்ளதாகவும் இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் யோகிபாபு மண்டேலா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி களத்திலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் கிராமத்து சப்ஜெக்டில் உருவாகவுள்ள இந்தப் படம் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யோகிபாபுவிற்கு மனைவி: இந்தப் படத்தில் யோகிபாபுவின் மனைவியாக லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்தை எடுக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் யோகி பாபு -லட்சுமி மேனன் நடிக்கவுள்ள இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X