Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனி காத்திருந்து பயனில்லை.. திருமணத்துக்கு தயாரான பிரபல நடிகை.. மாப்பிள்ளை தேடல் தீவிரம்!
நடிகை லட்சுமி மேனனுக்கு அவரது குடும்பத்தினர் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகின்றனர்.
Recommended Video
சென்னை: நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கும்கி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் பிஸியான நடிகையானார்.
இரண்டாவது படமான சுந்தரபாண்டியனும் வெற்றி பெற, முன்னணி நடிகைகளின் வரிசைக்கு டக்கென சென்றுவிட்டார். இதையடுத்து குட்டிப்புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
விஷாலுடன் கிசுகிசு
இடையில் நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி தான் என பின்னர் தெரியவந்தது.
கடைசி படம்
கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தார் லட்சுமி மேனன். அதன் பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. இந்த ஆண்டு தான் பிரபு தேவா ஹீரோவாக நடிக்கும் யங் மங் சங் படத்தில் அவர் நடித்துள்ளார்.
படிப்பில் கவனம்
ஆனால் அதன் பிறகு அவர் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. 10வது படிக்கும் போதே லட்சுமி மேனன் நடிக்க வந்துவிட்டார். இதனால் அவர் படிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தார்.
திருமணம் செய்ய முடிவு
அவருக்கு தற்போது 22 வயது ஆகிறது. எனவே லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அவருக்கு திருமணம் நடக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.