என் இஷ்டம்.. நீங்கள் யார் என்னை கேள்விக் கேட்க.. நெட்டிசன்களை கடுமையாக விளாசி தள்ளிய லக்ஷ்மி மேனன்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து காட்டமாக அறிக்கை வெளியிட்ட நடிகை லக்ஷ்மி மேனன் அதற்காக தன்னை தாறுமாறாக விமர்சித்த நெட்டிசன்களை விளாசி தள்ளியுள்ளார்.

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை லக்ஷ்மி மேனன். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஆனால் வளர்ந்த வேகத்திலேயே சறுக்கியது லக்ஷ்மி மேனனுக்கு. அவரது நடிப்பில் படங்கள் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது.

கவுதம் கார்த்தியுடன்..

கவுதம் கார்த்தியுடன்..

கடைசியாக 2016ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தார். அதன்பிறகு லக்ஷ்மி மேனனுக்கு எந்த படமும் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் அவரது உடல் எடை கூடிப்போனதே என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது கவுதம் கார்த்தியுடன் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் லக்ஷ்மி மேனன்.

பிக்பாஸில் பெயர்

பிக்பாஸில் பெயர்

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஷ்மி மேனனின் பெயர் அதிகம் அடிபட்டது. நடிகை லக்ஷ்மி மேனன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்றும் இதன் மூலம் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெறப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிப்பட்டன.

டாய்லெட் கழுவ மாட்டேன்

டாய்லெட் கழுவ மாட்டேன்

இந்நிலையில் இதுகுறித்து அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை ஷேர் செய்தார். அதில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாக வெளியான தகவலை மறுத்தார். மேலும் நான் யாருடைய எச்சில் தட்டையும் கழுவ மாட்டேன் என்றும் மற்றவர் பயன்படுத்தும் டாய்லெட்டை இப்போதும் சாரி எப்போதும் சரி கழுவ மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

தாறுமாறு விமர்சனம்

தாறுமாறு விமர்சனம்

மேலும் கேமராவுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக சண்டை போட முடியாது என்றும் கூறியிருந்தார். இனிமேல் யாரும் இதுபோன்ற மோசமான நிகழ்ச்சிகளில் என் பெயரை இழுக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்றும் கூறியிருந்தார். லட்சுமி மேனனின் இந்த பேச்சால் அப்செட்டான ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் தாறுமாறாக விமர்சித்தனர்.

கழுவாமல்தான் சாப்டுவீங்களா?

கழுவாமல்தான் சாப்டுவீங்களா?

நீங்கள் டாய்லெட்டை கழுவாமல்தான் பயன்படுத்துவீர்களா? தட்டை கழுவாமல்தான் சாப்பிடுவீர்களா என கண்டப்படி கேள்விகளால் நச்சரித்து வந்தனர். இதனால் காண்டாகிபோன லக்ஷ்மி மேனன், நெட்டிசன்களை விளாசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் வீடியோ

மீண்டும் வீடியோ

அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான எனது ஸ்டோரியை பார்த்தப்பிறகு நிறைய பேர் எனக்கு நெகட்டிவ் மெஸேஜ்களை அனுப்பி வருகின்றனர். நான் என்னுடைய வீட்டின் எச்சை தட்டையோ டாய்லெட்டை கழுவ மாட்டேன், சுத்தமாக இருக்க மாட்டேன் என நினைக்கும் மக்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

என் உரிமை

என் உரிமை

அதாவது என்னை கேள்வி கேட்க நீங்கள் யாருமில்லை. அது என்னுடைய உரிமை மற்றும் என்னுடைய விருப்பம். சிலருக்கு அந்த நிகழ்ச்சி பிடித்திருக்கும், சிலருக்கு பிடிக்காது. நான் என்னுடைய எச்சில் தட்டை கழுவுவேன், என் வீட்டில் உள்ள டாய்லெட்டை சுத்தம் செய்வேன். கேமராவுக்கு முன்னால் அதை செய்ய விரும்பவில்லை அவ்வளவுதான். இவ்வாறு லக்ஷ்மி மேனன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X