ரசிகரை கெட்ட வார்த்தையில் திட்டிய நடிகை லக்ஷ்மி மேனன்.. ஒட்டு மொத்த ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி..!

சென்னை: நடிகை லக்ஷ்மி மேனன் ரசிகர் ஒருவரை கெட்ட வார்த்தையில் திட்டியது ஒட்டு மொத்த ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சுந்தரப்பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை லக்ஷ்மி மேனன். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லக்ஷ்மி மேனன், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். படிப்புக்காக இடையில் ஒரு பிரேக் விட்டார் லக்ஷ்மி மேனன்.

பட வாய்ப்பு இல்லை

பட வாய்ப்பு இல்லை

அவ்வளவுதான்.. தமிழ் சினிமா அவரை மறந்தேவிட்டது. அவரது நடிப்பில் படங்கள் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக 2016ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தார். அதன்பிறகு லக்ஷ்மி மேனனுக்கு எந்த படமும் கிடைக்கவில்லை.

ஸ்லிம்மான போட்டோஸ்

ஸ்லிம்மான போட்டோஸ்

அவரது உடல் எடை கூடிப்போனதே பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் என கூறப்பட்டது. தொடர்ந்து நடனம் கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள நடிகை லக்ஷ்மி மேனன் அண்மையில் தான் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான போட்டோக்களை ஷேர் செய்தார்.

பலரும் கேள்வி எழுப்பினர்

பலரும் கேள்வி எழுப்பினர்

அதனை பார்த்த அத்தனை பேரும் வாவ் என வாயை பிளந்தனர். அவ்வளவு க்யூட்டாக இருந்தார் அந்த போட்டோக்களில். இந்நிலையில்தான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

டாய்லெட் கழுவமாட்டேன்

டாய்லெட் கழுவமாட்டேன்

இதனால் கடுப்பான லக்ஷ்மி மேனன், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை என மறுப்பு தெரிவித்தார். மேலும் நான் யாருடைய எச்சில் தட்டையும் கழுவ மாட்டேன் என்றும் மற்றவர் பயன்படுத்தும் டாய்லெட்டை இப்போதும் சாரி எப்போதும் சரி கழுவ மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

அசராமல் விளக்கம்

அசராமல் விளக்கம்

லக்ஷ்மி மேனனின் இந்த காட்டமான பதிலை பார்த்த ரசிகர்கள், அப்போது வீட்டில் டாய்லெட் மற்றும் பிளேட்டை கழுவாமல்தான் பயன்படுத்துவீர்களா என் கேட்டு அவரை வச்சு செய்தனர். அதற்கும் அசராமல் விளக்கம் கொடுத்தார் நடிகை லக்ஷ்மி மேனன்.

சிங்கிள் இல்லை..

சிங்கிள் இல்லை..

இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் கூறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அவுட்டாக்கிவிட்டார். அதாவது ரசிகர் ஒருவர், நீங்கள் சிங்கிளா என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த லக்ஷ்மி மேனன், இல்லை என்று ஒரே வார்த்தை பளீச்சென போட்டுடைத்துள்ளார்.

மழுப்பல் பதில்

மழுப்பல் பதில்

காதல் உறவில் உள்ள நடிகைகளே, விஷயம் வெளியே தெரிந்தால் மார்க்கெட் போய்விடும் என மூடி மறைத்து மழுப்பலாக பதில் கூறி வருகின்றனர். ஆனால் லக்ஷ்மி மேனன், தான் காதல் உறவில் இருப்பதை அப்படியே கூறியிருகிறாரே என ஆச்சரியப்பட்டனர்.

கவர்ச்சிப் படம்

கவர்ச்சிப் படம்

இந்நிலையில் மற்றொரு ரசிகரின் கேள்விக்கு படு மோசமான பதிலை கூறி மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டுள்ளார் லக்ஷ்மி மேனன். அதாவது ரசிகர் ஒருவர், லட்சுமி மேனனிடம் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தை கேட்டுள்ளார்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

அதற்கு பச்சையாக ஒரு கெட்ட வார்த்தையை சேர்த்து ஒரே கேள்வியை கேட்பதால் அலுத்து போய்விட்டேன் என பதிலளித்துள்ளார். லக்ஷ்மி மேனனின் இந்த பதில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் லக்ஷ்மி மேனனுக்கு வாய் அதிகமாகிவிட்டதாக கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X