என்னம்மா இப்படி பண்றீங்களே ம்மா.. கமலிடம் காதலை சொன்ன லட்சுமி ராமகிருஷ்ணன்.. செம ட்விஸ்ட் தெரியுமா?
சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குநர் என பல முகங்களை கொண்டவர். தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர்; இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையே தனியார் சேனல் ஒன்றில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் அவர்; கமல்ஹாசனிடம் காதலை சொன்ன விஷயம் தெரியவந்திருக்கிறது.
பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்தப் படத்துக்கு பிறகு பொய் சொல்லப்போறோம், எல்லாம் அவன் செயல், ஈரம், நாடோடிகள், ஆதவன், ஆண்மை தவறேல், யுத்தம் செய் என பல படங்களில் நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தில் அருமையாக நடிக்கும் அவர் இயக்குநராகவும் ஜொலித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இயக்கிய படங்கள்: அதன்படி அவர் முதலில் ஆரோகணம் என்ற படத்தை இயக்கினார். அப்படம் சரியாக போகவில்லை. இருப்பினும் தொடர்ந்து, நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர், ஆர் யூ ஓகே பேபி ஆகிய படங்களை இயக்கினார். அவர் நடிகையாக ஜொலித்ததுபோல் இயக்குநராக பெரிதாக வெல்ல முடியவில்லை. தற்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்திவருகிறார்.

சொல்வதெல்லாம் உண்மை: நடிகையாக அவர் பெற்ற பிரபல்யத்தைவிடவும் அதிக பிரபல்யம் கொடுத்தது என்றால் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. தனியார் சேனல் ஒன்றில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள்வரை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதில் அவர் கூறும், 'என்னம்மா இப்படி பண்றீங்களே ம்மா' என்ற வாசகம் தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆனது. அதேசமயம் அதனை வைத்து அவரை பலரும் கலாய்க்கவும் செய்திருக்கிறார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி: இப்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். நிகழ்ச்சிக்கு தகுந்தபடி தன்னை தயார்ப்படுத்திக்கொண்ட அவர்; தன்னால் முடிந்த அளவு சிறப்பாக விளையாடிவருகிறார். இந்நிலையில் கமல்ஹாசனிடம் காதலை சொன்ன விஷயம் குறித்து அவர் அந்நிகழ்ச்சியில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
காதலை சொன்ன லட்சுமி: அவர் பேசுகையில், "கல்லூரியில் படிக்கும்போதிருந்தே நான் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகை. அதுமட்டுமின்றி அவரை காதலிக்கவும் செய்தேன். சினிமாவுக்கு வந்த பிறகு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனது மனதில் இருந்த காதலையும் அவரிடம் சொன்னேன். ஆனால் அவரோ தங்கச்சி என சொல்லி ட்விஸ்ட் கொடுத்துவிட்டார்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, அட கமல் இப்படி ஒரு ட்விஸ்ட் கொடுத்துட்டாரே; அவர் செம தெளிவுதான் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











