திரையில் அம்மா.. இன்ஸ்டாவில் கிளாமர் குயின்.. நீச்சல் உடையில் சர்ப்ரைஸ் கொடுத்த சீரியல் நடிகை!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களுடன் பேரதரவுடன் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற பிரபல சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இயல்பான நடிப்பு, குடும்பத்தோடு இணைந்த கதாபாத்திரம் ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

அந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் அம்மா, அத்தை, அக்கா போன்ற முக்கியமான துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். சின்னத்திரையில் குடும்பப் பெண்மணியாகக் காட்சியளித்தாலும், சமூக வலைதளங்களில் அதற்கு மாறான கவர்ச்சி காட்டிரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

lakshmi vasudevan instagram
Photo Credit:

நடிகை லட்சுமி வாசுதேவன்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை லட்சுமி வாசுதேவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புத்தாண்டு வாழ்த்து போட்டோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. நீச்சல் குளத்தில் அவர் இருக்கும் நிலையில், நீச்சல் உடையில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் அந்த போட்டோ, ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. சீரியல்களில் எட்டு முழ புடவையை சுற்றிக்கொண்டு பாரம்பரியமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை, இவ்வாறு மாடர்ன் லுக்கில் தோன்றியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் குளத்தில்: இந்த போட்டோ வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் அவரது தன்னம்பிக்கையையும், உடல் ஆரோக்கியத்தையும் பாராட்டி வருகின்றனர். இன்னொரு தரப்பினர், திரையில் அம்மா... இன்ஸ்டாவில் கிளாமர் குயினா என கேள்வி எழுப்பி வருகின்றனர். எப்படி இருந்தாலும், நடிகை லட்சுமி வாசுதேவனின் இந்த புத்தாண்டு போட்டோ இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

மிரட்டினார்கள்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை லட்சுமி, நான் பெரிய தவறு செய்துவிட்டேன் "எனக்கு குறுஞ்செய்தி மூலமாக ஒரு லிங்க் வந்தது. அந்த லிங்கை தொட்டதும் எனது மொபைல் போன் ஹேக்கிங் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து எனது போனில் இருந்த படங்கள் மார்பிங் செய்யப்பட்டன. எனக்கு மிரட்டல்கள் தொடர்ந்து வந்தது, இந்தப் படங்களை எனது பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிடுவிவதாக மிரட்டினார்கள் என கண்கலங்கி பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X