இழுத்து கட்டிய சேலையில்… எகிறி எகிறி ... குத்தாட்டம் போட்ட லீசா!
சென்னை : அழகாக இழுத்துக் கட்டிய சேலையில் அருமையான குத்தாட்டம் போட்டு உள்ளார் கண்மணி சீரியல் லீசா. இதைப்பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியாகி அவரை தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர்.
இணையத்தில் படுஆக்டிவாக இருக்கும் லீசா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை தன்பக்கம் வைத்துள்ளனர். இதனால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
தற்போது இவர் பதிவிட்ட வீடியோ தாறுமாறாக வைரலாகி டிரெண்டிங்கில் உள்ளது. 1993ம் ஆண்டு பிறந்த லீசா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். இருப்பினும் இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் எத்திராஜ் கல்லூரியில் தான் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

பெயர் எடுக்கவில்லை
சினிமா மீது இருந்த ஆசையில் திரைத்துறையில் நுழைந்தார். வெளியான பலே வெள்ளைய தேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் பெயர் எடுக்கும் அளவுக்கு இவருக்கு எந்த படமும் அமையவில்லை

மனம் கவர்ந்த லீசா
இந்நிலையில் தனது கவனத்தை சின்னத்திரைப்பக்கம் திருப்பினார். சன் டி.வி.யில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த தொடராக கண்மணி சீரியலில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் சவுந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்துள்ளார்.
லீசா நீங்க வேறலேவல்
மேலும் இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் லீசா, அவ்வப்போது, கவர்ச்சி ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு அதை வைரலாக்கி வருகிறார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெலுங்கு பாடல் ஒன்று இழுத்து கட்டிய சேலையில், தாறுமாறாக குத்தாட்டம் போட்டுள்ளார்.

வைரல் வீடியோ
சும்மா சொல்லக் கூடாது.. எகிறி எகிறி அவர் குத்தாட்டம் போட்டுள்ளதை எல்லோரும் உற்றுப் பார்த்து வியந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி இளசுகளை பாடாய்படுத்தி வருகிறது. லைக், ஷேக் என தற்போது இந்த வீடியோ டிரெண்டிங்கி உள்ளது. போங்க லீசா நீங்க வேறலேவல் தான் என ரசிகர்கள் அவரை குஷிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











