மீண்டும் கர்ப்பமான நடிகை.. பிகினியில் வெளிப்பட்ட பேபி பம்ப்.. முத்தம் கொடுத்த ஜாக்! வைரல் போட்டோஸ்!

Recommended Video

Watch Video : Lisa Haydon Flaunts Her Baby Bump In Bikini

மும்பை: நடிகை லிசா ஹெய்டன் மீண்டும் கர்ப்பமாக உள்ளார். பிகினியில் அவர் பேபி பம்பை காட்டும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

நடிகை லிசா ஹெய்டன் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிஷா படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஆயிஷா, கடந்த 2016 ஆம் ஆண்டு தினோ லால்வானி என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. ஜாக் லால்வானி என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தைக்கு தற்போது மூன்று வயதாகியுள்ளது.

பிகினியில் போட்டோ

பிகினியில் போட்டோ

இந்நிலையில் நடிகை லிசா ஹெய்டன் தற்போது மீண்டும் கர்ப்பமாக உள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் லிசா ஹெய்டன் தான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பிகினியில் போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

பேபி பம்பில் முத்தம்

பேபி பம்பில் முத்தம்

அதில் கறுப்பு நிற பிகினியில் பீச்சில் தனது மகன் ஜாக்குடன் நேரத்தை கழிக்கிறார் லிசா. அப்போது தனது தாயின் பேபி பம்பில் முத்தம் கொடுக்கிறார் ஜாக். இதனை தாய்மையின் பூரிப்பில் மகிழ்ச்சியுடன் சிரித்தப்படியே ரசிக்கிறார் லிசா.

வெறும் காதல்

இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நடிகைகள் ஷிபானி டன்டேகர், எவ்லின் ஷர்மா ஆகியோர் இது வெறும் காதல் என கமென்ட் தெரிவித்துள்ளனர்.

ஜிம்மில் உடற்பயிற்சி

மேலும் நீச்சல் குளத்திலும் குளித்து சன்பாத் எடுத்த லிசா, அங்கிருந்தும் கறுப்பு நிற பிகினியில் போஸ் கொடுத்துள்ளார். அதோடு ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார் நடிகை லிசா ஹெய்டன்.

கர்ப்ப அறிவிப்பு

நடிகை லிசா ஹெய்டனின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மைக் காலமாக பாலிவுட் நடிகைகள் தொடர்ந்து கர்ப்பம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X