twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆன்லைனில் மதுபாட்டில்... ரூ.35 ஆயிரத்தை இழந்த ஹீரோயின்... அதிரடியாக மீட்ட போலீஸ்

    By
    |

    மும்பை: ஆன்லைனில் மதுபாட்டில் ஆர்டர் செய்து ரூ.35 ஆயிரத்தை ஹீரோயின் ஒருவர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழில், விதார்த், ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான படம், சித்திரம் பேசுதடி 2. ராஜன் மாதவ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தவர் பிரியா பானர்ஜி.

    தெலுங்கில், கிஸ், அசுரா, ஜஸ்பா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தியில் 3 தேவ், பாரிஸ் உட்பட சில படங்களில் நடித்துவருகிறார்.

     இந்த 5 காரணங்களுக்காக கார்த்தியின் 'தம்பி'யை தாராளமா தியேட்டரில் பார்க்கலாம்! இந்த 5 காரணங்களுக்காக கார்த்தியின் 'தம்பி'யை தாராளமா தியேட்டரில் பார்க்கலாம்!

    மதுபாட்டில்

    மதுபாட்டில்

    கனடா நாட்டில் பிறந்து வளர்ந்த பிரியா, மும்பையில் கர் பகுதியில் வசித்து வருகிறார்.
    இவர் கடந்த சில நாட்களுக்கு முன், ஆன்லைனில் மதுபாட்டில் ஆர்டர் செய்தார். அவர் ஆர்டர் செய்த இடத்தில் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. எடுத்து பேசினார்.

    டெபிட் கார்டு விவரம்

    டெபிட் கார்டு விவரம்

    பிரியாவிடம் பேசியவர், முதலில் பணம் செலுத்திவிடுங்கள், வீட்டுக்கு கொண்டு வருகிறேன் என்று கூறினார். இதையடுத்து டெபிட் கார்டு விவரங்களை கேட்டுள்ளார், பேசியவர். மது ஆசையில் இருந்த அவர், கார்டின் எல்லா விவரங்களையும் தெரிவித்துள்ளார். பின்னர் ஓடிபி-யை கேட்டுள்ளார். கொடுத்தார்.

    23 ஆயிரம் ரூபாய்

    23 ஆயிரம் ரூபாய்

    அடுத்த நொடியில், அவர் போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில், ரூ.23 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த பிரியா, உடனே சம்மந்தப்பட்ட நபருக்கு போன் செய்தார். என்னங்க இது, இவ்வளவு ரூவா டெபிட் ஆயிருக்கு? என்று கேட்டார்.

    மன்னிப்புக் கேட்ட நபர்

    மன்னிப்புக் கேட்ட நபர்

    ஸாரிங்க, தப்பா பண்ணிட்டேன் என்று கூலாக மன்னிப்புக் கேட்ட, அந்த நபர், உடனடியா கூகுள் பே பார் கோடை அனுப்பி, இதில் ஸ்கேன் பண்ணுங்க. உங்க ருவா வந்துரும் என்றார்.

    12 ஆயிரம் காலி

    12 ஆயிரம் காலி

    அதன்படி செய்தார் பிரியா. மேலும் 12 ஆயிரம் காலி. ஷாக் ஆன அவர் மீண்டும் அந்த நபருக்கு ஃபோன் செய்ய, அவர் போனை சுவிட்ச்டு ஆஃப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். பீதி அடைந்தார் பிரியா.

    களத்தில் குதித்த போலீஸ்

    களத்தில் குதித்த போலீஸ்

    தான் ஏமாற்றப்பட்டோம் என்பதைப் புரிந்துகொண்டவர் உடனடியாக, கர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் உடனடியாகக் களத்தில் இறங்கினர். எந்த அக்கவுண்ட்டுக்கு பணம் டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறது என்பதை கண்டுபிடித்து பணத்தை உடனடியாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

    கைது செய்ய நடவடிக்கை

    கைது செய்ய நடவடிக்கை

    இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தீப் பட்டீல் கூறும்போது, இது போன்ற ஆன்லைன் மது மோசடி புகார்கள் அதிகமாக மும்பையில் நடக்கின்றன. உடனடியாகத் தகவல் தெரிந்ததால், வங்கிக்கு ஃபோன் செய்து பணபரிமாற்றத்தை தடுத்து நிறுத்த முடிந்தது. அதிக நேரம் ஆகியிருந்தால் இது சாத்தியமாகி இருக்காது. சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

    English summary
    Actor Priya Banerjee Loses Rs 35,000 While Buying Liquor Online, Mumbai's Khar police Recover the amount In 2 Hours
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X