கனடா மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண போறாரா லாஸ்லியா.. வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!

சென்னை: நடிகை லாஸ்லியாவுக்கு திருமணம் என வெளியான தகவல் குறித்து லாஸ்லியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா.

இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சக ஹவுஸ்மேட்டான கவினை காதலித்தார். ஆனால் கவினுடனான லாஸ்லியாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கவினுடன் காதல்

கவினுடன் காதல்

இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருவரும் தொடர்ந்து கடலை போட்டு தங்களின் காதலை வளர்த்து வந்தனர்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவரும் தங்களின் காதல் குறித்து வாயே திறக்காமல் இருந்து வருகின்றனர்.

காதலித்தேன் இழந்தேன்

காதலித்தேன் இழந்தேன்

சமூக வலைதளங்களிலும் கூட ரசிகர்கள் கெஞ்சிக் கேட்டும் மவுனம் சாதித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஷேர் செய்த போட்டோ ஒன்றுக்கு, நான் காதலித்தேன், இழந்தேன், தவறவிட்டேன், காயப்படுத்தினேன், நம்பினேன், மேலும் தவறுகளையும் செய்தேன், ஆனால் இவை எல்லாவற்றில் இருந்தும் நான் கற்றுக்கொண்டேன் என கேப்ஷன் கொடுத்தார்.

மூன்று படங்கள்

மூன்று படங்கள்

அதனை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் கவினை காதலித்ததையா கூறுகிறீர்கள் என கேட்டனர். லாஸ்லியாவின் அந்த பதிவு பெரும் வைரலானது. அதற்கெல்லாம் பதில் சொல்லாத லாஸ்லியா அடுத்தடுத்து மூன்று தமிழ் படங்களில் கமிட்டாகியுள்ளார்.

கனடா மாப்பிள்ளை

கனடா மாப்பிள்ளை

இந்நிலைலையில் நடிகை லாஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் என்றும், மாப்பிள்ளை லாஸ்லியா அப்பாவின் நண்பரின் மகன் என்றும் தகவல் வெளியானது. கனடாவை சேர்ந்த அந்த மாப்பிள்ளைக்கு லாஸ்லியாவை திருமணம் முடித்து வைக்க அவரது அப்பா பேசி முடித்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

லாஸ்லியா தரப்பு விளக்கம்

லாஸ்லியா தரப்பு விளக்கம்

மேலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவல் குறித்து லாஸ்லியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த செய்தி ஒரு ஆதாரமற்ற வதந்தி என்றும், அந்த மாதிரியான ஐடியா இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வளரும் இளம் நடிகை

வளரும் இளம் நடிகை

ஃபிரண்ட்ஷிப் படத்தில் அறிமுகமான அவர் இப்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக வாழ்க்கையைப் தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் 'பிக் பாஸ் 4' ஆரி மற்றும் 'ராட்சசன்' தயாரிப்பாளர் டெல்லி பாபுவின் அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் லாஸ்லியா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X