ஜிம்மில் தீயாய் உடற்பயிற்சி செய்யும் லாஸ்லியா!
சென்னை : நடிகை லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமான பிரெண்ட்ஷிப் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலக மக்களுக்கு அறிமுகமான லாஸ்லியா இப்பொழுது பல படங்களில் கதாநாயகியாக அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.
அடுத்ததாக தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வரும் லாஸ்லியா இப்போது ஜிம்மில் தீயாய் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகச்சிறப்பாக விளையாடி
இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த நடிகையை லாஸ்லியா தமிழில் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் மனதை வென்றார். இப்பொழுது உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ள லாஸ்லியா அடுத்த கட்டமாக கதாநாயகியாகவும் பல படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.

கதாநாயகியாக அறிமுகமானார்
இந்த வகையில் அறிமுக இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷ்யாம் சூர்யா ஆகியோரின் இயக்கத்தில் உருவான பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கல்லூரி கதை களத்தில் பிரண்ட்ஷிப்பை மையப்படுத்தி உருவான இந்த திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். அர்ஜுன் ,சதீஷ், வெட்டுக்கிளி பாலா முக்கிய வேடத்தில் எடுத்திருந்தார்.
Recommended Video

தர்ஷனுக்கு ஜோடியாக
பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்த லாஸ்லியா அடுத்ததாக கூகுள் குட்டப்பா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரபல மலையாள திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் தயாரிக்க அவரது உதவி இயக்குனர்களில் சபரி மற்றும் சரவணன் இந்தப் படத்தை இயக்கி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்ட தர்ஷன் மற்றும் லாஸ்லியா முதல்முறையாக ஜோடியாக இந்த படத்தில் நடிக்கின்றனர்.

ஜிம்மில் தீயாய் உடற்பயிற்சி
பிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ராட்சசன் பட தயாரிப்பாளர் அடுத்து தயாரிக்கும் புதிய படத்திலும் முற்றிலும் புதிய படக்குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகிறது. இவ்வாறு கதாநாயகியாக அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் லாஸ்லியா இப்பொழுது ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பிங்க் டிரஸ்ஸில் இரண்டு கையிலும் இரண்டு டம்புல்களை வைத்துக்கொண்டு தீயாய் உடற்பயிற்சி செய்யும் லாஸ்லியா இதுதான் என்னுடைய மகிழ்ச்சியான இடம் என பதிவிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











