உடல் எடை குறைந்து பார்க்கவே பாவமாக இருக்கும் லாஸ்லியா!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்றவர் லாஸ்லியா
இப்பொழுது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்
பிரண்ட்ஷிப் படத்தை தொடர்ந்து இப்போது தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வரும் லாஸ்லியா உடல் எடை குறைந்துபோய் பார்க்கவே பரிதாபமாக இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை லாஸ்லியா. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

லாஸ்லியா ஆர்மி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தபோதே இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது லாஸ்லியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைதளங்கள் முழுவதும் லாஸ்லியாவுக்கு பல ரசிகர்கள் பட்டாளம் தானாகவே உருவாகின. லாஸ்லியா மிகச் சிறப்பாக விளையாடியதை பார்த்த ரசிகர்கள் இறுதி வரை சென்று வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்த்தனர் ஆனால் இறுதி சுற்று வரை சென்று கடைசியில் வெளியேற்றப்பட்டார்

தர்சனுக்கு ஜோடியாக
ஹர்பஜன்சிங் ஹீரோவாக தமிழில் அறிமுகமான பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக முதல் முறையாக தமிழில் அறிமுகமான லாஸ்லியா அடுத்ததாக தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட் டப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட் டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் இணைந்து இயக்கி வருகின்றனர்.

உடல் எடை குறைந்து
பிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தொடர்ந்து ராட்சசன் தயாரிப்பாளரின் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் திரில்லர் கதையில் லாஸ்லியா நடிக்க இப்படம் பூஜை நடைபெற்றது அதன் பிறகு படப்பிடிப்பு குறித்த எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் லாஸ்லியா இப்பொழுது உடல் எடை குறைந்து போய் ஒல்லியாக பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சப்பியா நெய் குழந்தை மாதிரி க்யூட்டா இருந்தீங்க இப்போ ஏன் உடல் இளைத்து இப்படி ஆயிட்டீங்க மறுபடியும் பழையபடி சப்பியா வாங்க என ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











