அப்பா இறந்த சோகமே இல்லையா.. போட்டோ ஷுட்ட எடுத்து தள்ளுறீங்க.. லாஸ்லியாவிடம் சீண்டும் நெட்டிசன்ஸ்!
சென்னை: விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களை எடுத்து தள்ளும் லாஸ்லியாவிடம் அப்பா இறந்த சோகமே இல்லையா என கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, அதன் பிறகு நடிகையாக மாறிவிட்டார்.
அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வரும் லாஸ்லியா, தற்போது கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும் படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மீண்டும் கவினுடன்
இதற்காக சென்னையில் முகாமிட்டுள்ள லாஸ்லியா தொடர்ந்து போட்டோ ஷூட்டுக்களை நடத்தி அவற்றை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கவினுடன் லாஸ்லியா எடுத்த போட்டோ வைரலானது.

கமெண்ட் ஆப்ஷன் ஆஃப்
இதனை தொடர்ந்து கவினும் நீங்களும் மீண்டும் சேர்ந்து விட்டீர்களா? எப்போது திருமணம் என கேட்டு நச்சரித்து வந்தனர் ரசிகர்கள். இதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்து வைத்திருந்தார் லாஸ்லியா.

ஸ்லீம் ஃபிட்
இந்நிலையில் மீண்டும் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்களை ஷேர் செய்து வரும் லாஸ்லியா ரசிகர்கள் கமெண்ட் செய்ய பர்மிஷன் கொடுத்துள்ளார். வெள்ளை நிற உடையில் ஸ்லீம் ஃபிட்டாக செம்ம க்யூட்டாக உள்ள லாஸ்லியா.

சோகமே இல்லையா?
இதனை பார்த்த ரசிகர்கள் செம க்யூட் பியூட்டிஃபுல் என ஜொள்ளு விட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் இப்படி போட்டோ ஷுட்டாய் எடுத்து தள்ளுகிறீர்களே உங்களுக்கு அப்பா இறந்த சோகமே இல்லையா என கேட்டு வருகின்றனர்.

மெலிந்து போன லாஸ்லியா
லாஸ்லியாவின் தந்தையான மரிய நேசன் கடந்த நவம்பர் மாதம் கனடாவில் தான் தங்கியிருந்த அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு லாஸ்லியாவும் எடை குறைந்து மெலிந்து போயுள்ளார்.

குவியும் லைக்ஸ்
இந்நிலையில் அவரிடம் இப்படி கேட்டு சீண்டி வருகின்றனர் நெட்டிசன்கள். லாஸ்லியாவின் இந்த போட்டோ ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











