twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடப்பாவமே.. அவருக்கு இப்படியொரு நோயாமே.. வெறுப்பில் போஸ்ட் செய்துவிட்டு உடனே டெலிட் செய்த ஹீரோயின்

    By
    |

    ஐதராபாத்: தனது கனவுகளை நோய் கொன்றுவிடுகிறது என்று நடிகை மாதவி லதா தெரிவித்துள்ளார்.

    பிரபல தெலுங்கு நடிகை மாதவி லதா. பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த ஆம்பள படத்தில் கிரணுக்கு மகளாக நடித்திருந்தார்.

    பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ஆந்திராவில் கடந்த வருடம் நடந்த பொதுத்தேர்தலில் பாஜக சார்பில், குண்டூர் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் தோற்றாலும் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    நடிகர்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக பழி சுமத்துகிறார்.. தர்ஷன் குறித்து கதறும் காதலி சனம் ஷெட்டி!நடிகர்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக பழி சுமத்துகிறார்.. தர்ஷன் குறித்து கதறும் காதலி சனம் ஷெட்டி!

    ரேவதியின் கேரக்டர்

    ரேவதியின் கேரக்டர்

    இவர் நேற்று முன் தினம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு படம் ஒன்றில் நடிகை ரேவதியின் கேரக்டரை ஒப்பிட்டு தனது நோய் பற்றி அவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கு தூக்கம் வராதது, ஒற்றைத்தலைவலி உட்பட நீண்ட கால நோய் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

    இறந்துவிடக் கூடும்

    இறந்துவிடக் கூடும்

    அதில் அவர், தெலுங்கு படமான 'பிரேமா'வில் ரேவதி ஒரு நாள் இறந்துவிடுவதை போல நானும் இறந்துவிடக் கூடும். (வெங்கடேஷ், ரேவதி நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் பிரேமா. இளையராஜா இசை அமைத்திருந்தார். இது தமிழில் அன்புச் சின்னம் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. படத்தில் சிறுவயதில் இருந்தே அதிக மாத்திரை எடுத்துக் கொண்டதால் உடல் உறுப்புகள் செயலிழந்துவிடும் ரேவதிக்கு. ஒரு நாள் திடீரென்று இறந்துவிடுவார்).

    மருந்துகளை வெறுக்கிறேன்

    மருந்துகளை வெறுக்கிறேன்

    அவரைப் போலவே நான் பயன்படுத்தும் மருந்துகள் ஒரு நாள் வேலை செய்யத் தவறினால் நான் உயிரிழக்க நேரிடும். இந்த வாழ்க்கையில் எனக்கு கனவுகளும் நம்பிக்கைகளும் உள்ளன. ஆனால் என் நோய் என்னை எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்துவிட செய்கிறது. நான் மருந்துகளை வெறுக்கிறேன் என்று கூறியிருந்தார்.

    நம்பிக்கை அளித்தனர்

    நம்பிக்கை அளித்தனர்

    அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு வேண்டியவர்களும் நண்பர்களும் போன் செய்து பேசியதாகக் கூறப்படுகிறது. கமென்ட் பகுதியில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள், ஆறுதல் கூறியிருந்தனர். சிலர் அவரது நம்பிக்கை அளித்தனர். இந்நிலையில் அந்தப் பதிவை திடீரென்று நீக்கிய அவர், நான் நலமாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    Read more about: actress illness நோய்
    English summary
    actress, Maadhavi Latha on Friday and talked about her death in her social media page. Comparing herself to Revathi’s character from the 1989 film Prema. However, surprising one and all, she deleted the post in a day and shared a fresh post stating that she is fine.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X