Madhoo Bala - நடிகரை கல்யாணம் செய்யவே கூடாது.. மோசமான அனுபவங்கள்.. நடிகை மதுபாலா ஓபன் டாக்
சென்னை: Madhoo Bala (மதுபாலா) நடிகரை கல்யாணம் செய்யக்கூடாது என்று முடிவெடுத்ததாக நடிகை மதுபாலா தெரிவித்திருக்கிறார்.
அழகன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மதுபாலா தொடர்ந்து ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தார். பிறகு மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதனையடுத்து இருவர், ஜெண்டில்மேன், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். தமிழில் கவனிக்கப்படும் நடிகையாக இருந்தாலும் ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் அவர்.
திருமணம்: சூழல் இப்படி இருக்க ஆனந்த் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அதற்கு சில வருடங்கள் நடிப்பிற்கு பிரேக் கொடுத்த அவர் 2008ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவுக்கு வந்தார். தமிழில் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவர் பிரியாணி, தேஜாவு உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
மதுபாலா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், ”ஒரு நிறுவனத்திற்கான விளம்பர படம் ஒன்றில் நடிப்பதற்காக சென்றிருந்தேன். அப்போதுதான் எனது கணவர் ஆனந்த்தை சந்தித்தேன். முதன்முறையாக அவரை சந்தித்தபோதே அவருக்கு என்னை பிடித்துவிட்டது என்றே நம்பினேன். பல இடங்களில் என்னை நெருங்கினார். அப்படித்தான் எங்களுக்குள் காதல் உருவானது.
சண்டை போடுவேன்: நாங்கள் சண்டை போடும்போதுகூட ஷோரூமில் ஒரு காரை தேர்வு செய்வது போன்று என்னை தேர்வு செய்துவிட்டாய் என்றுதான் சொல்வேன். இன்று ஒருவர், நாளை ஒருவர், நாளை மறுநாள் ஒருவர் என்றுதான் நடிகர்களின் மனநிலை இருக்கும். அதை நான் அனுபவித்திருக்கிறேன். அதை எப்படி கையாள்வது என்றும் எனக்கு தெரியவில்லை.
அனுபவம்: நான் திரைத்துறைக்குள் நுழையும்போது கண்டிப்பாக ஒரு நடிகரைத்தான் திருமணம் செய்வேன் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் எனக்கு கிடைத்த சில அனுபவங்கள் ஒரு நடிகரை மட்டும் திருமணம் செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. ஆனந்த்திற்கு ஃபேண்டசியாக எல்லாம் காதலிக்க தெரியாது. ஆனால் காதலுக்கு அவர் உண்மையாக இருப்பார்.
சரியான முறையில் அணுகுவார்: ஒவ்வொரு சண்டையிலும் நான் எல்லை மீறி பேசினால் அதனை சரியாக புரிந்துகொண்டு அணுகுவார். நான் எப்படி இருப்பேனோ அதேபோன்றுதான் அவரும். அவருக்கு முடி இல்லாதது அவருக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுத்திருந்தது. என்னிடம் காதலை சொல்லும்போதுகூட அவருக்கு முடி இல்லை. ஆனால் அது எனக்கு ஒரு பிரச்னையாக தெரியவில்லை” என்றார்.


Click it and Unblock the Notifications











