முத்தக்காட்சியில் நடித்தேன்.. அது மனவேதனையாக இருந்தது.. நடிகை மதுபாலா பேட்டி!
சென்னை: தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'கண்ணப்பா'. இத்திரைப்படம் 27ந் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மதுபாலா, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பல விஷயத்தை பகிர்ந்து கொண்ட அவர், நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது என கூறியுள்ளார்.
அழகன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மதுபாலா, அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பின் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிப்படத்தில் நடித்தார். திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த மதுபாலா, தலைவி திரைப்படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சினிமாவில் நல்ல நல்ல ரோலில் மதுபாலா நடித்து வருகிறார்.


நடிகை மதுபாலா பேட்டி: அந்த வகையில் நடிகை மதுபாலா, இந்திய சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு புராண மற்றும் சரித்திர திரைப்படமாக 'கண்ணப்பா' திரைப்படத்தில் நடித்துள்ளார். சிவபெருமானின் தீவிர பக்தரான கண்ணப்ப நாயக்கனாரின் வாழ்க்கையை மையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை 'மகாபாரதம்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில், விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் கதாபாத்திரத்திலும், நடிகர் பிரபாஸ் ருத்ரா என்னும் வேடத்திலும், மோகன்லால் கிராதகா என்கிற கதாபாத்திரத்திலும், அக்ஷய் குமார் சிவபெருமானாகவும், காஜல் அகர்வால் பார்வதி தேவியாகவும், சரத்குமார் நாதநாதூடு கதாபாத்திரத்திலும், மதுபாலா பன்னகா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
தர்ம சங்கடம்: அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மதுபாலா, நான் சினிமாவிற்கு வருவதில் என் தந்தைக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. நான் சினிமாவிற்கு வந்ததே ஒரு விபத்து போலத்தான் நடந்தது. நான் ஒரு பாரம்பரிய குடும்பத்தில் வளர்ந்தேன். இதனால், நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அதனால் பல படவாய்ப்புகளை நான் நிராகரித்துள்ளேன். ஒரு படத்தில் என்னிடம் முன்கூட்டியே சொல்லாமல் முத்தக் காட்சியில் நடிக்க சொன்னார்கள். அதுவும் உதடு முத்தக் காட்சியில் நடிப்பதற்கு என்னிடம் அதிக நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அந்த காட்சியில் நடிக்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கி கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து உதடு முத்த காட்சியில் நான் நடிக்க வேண்டியதிருந்தது. அது எனக்கு மிகவும் வேதனையான அனுபவமாக இருந்தது. ஆனால் எடிட்டிங்கில் பார்த்தபோது பட குழுவினர் அந்த காட்சிக்கு உதடு முத்தம் தேவை இல்லை என நீக்கி விட்டார்கள். இந்த காலத்தில் இருக்கும் இளம் வயது நடிகைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஆனால், நான் 22 வயதில் மிகவும் அப்பாவியாக இருந்தேன். அதனால் தான் சில விஷயங்களில் நான் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் போய்விட்டது என்று அந்த பேட்டியில் நடிகை மதுபாலா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











