என்னது பொண்ணா.. அக்கா தங்கச்சி மாதிரில்ல இருக்கு.. மணிரத்னம் ஹீரோயின் ரிலீஸ் செய்த மகளின் போட்டோ!

சென்னை: நடிகை மதுபாலாவின் மகள் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஆஹா... என வாயை பிளந்துள்ளனர்.

தமிழ் சினிமாவுக்கு அழகன் படத்தின் மூலம் அறிமுகமானாவர் நடிகை மதுபாலா. நடிகர் மம்முட்டியுடன் துருதுரு பெண்ணாக நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து இந்தி, மலையாளம், தெலுங்கு கன்னடம் என நடித்து புகழ்பெற்றார் மதுபாலா. சினிமாவுக்கு அறிமுகமான முதல் ஆண்டிலேயே, தமிழ் இந்தி, மலையாளம் என மூன்று மொழிகளி 7 படங்களில் நடித்தார்.

மணிரத்னம்

மணிரத்னம்

இதனை தொடர்ந்து 1992ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் நடித்து நாட்டின் ஒட்டு மொத்த பார்வையையும் பெற்றார்.

திருமணம்

திருமணம்

ஜென்டில்மேன் படத்திற்கு பிறகு தமிழில் அதிகம் நடிக்காமல் இருந்த மதுபாலா இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 1999ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மகள்களின் போட்டோஸ்

மகள்களின் போட்டோஸ்

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புத்தாண்டை தனது மகள்களுடன் கழித்துள்ளார் மதுபாலா. அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மது.

க்யூட்டான பொண்ணு

க்யூட்டான பொண்ணு

அதில் ஒரு போட்டோவில் ஸ்கை ப்ளூ ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் வெள்ளை நிற குட்டி டிராயர் என அசத்தலாக உள்ளார் மதுபாலாவின் மகள். க்யூட்டான சிரிப்பு ச்சப்பி கன்னங்கள் என பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் வகையில் தனது தாயை கட்டிப்பிடித்தப்படி உள்ளார்.

இரண்டு மகள்கள்

இரண்டு மகள்கள்

அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மதுபாலா ப்ரவுடு மோம் என பதிவிட்டிருக்கிறார். இதேபோல் மற்றொரு போட்டோவில் தனது இரண்டு மகள்களுடன் இருக்கிறார் மதுபாலா.

வைரல் போட்டோஸ்

வைரல் போட்டோஸ்

பிளாக் அன்ட் வொய்ட்டில் உள்ள அந்த போட்டோவில் மூன்றுபேரும் அக்கா தங்கையை போல் உள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சகோதரிகளா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் உங்களுக்கு பிள்ளைகளா அல்லது உங்கள் சகோதரிகளா என கேட்டு கமென்ட் பதிவிட்டு வருகின்றனர். மதுபாலாவின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், சொல்லுங்க.. அவர் உங்களின் சகோதரி தானே.. க்யூட் அம்மா என தெரிவித்திருக்கிறார்.

அப்படி இருக்கிறீர்கள்

நீங்கள் பார்க்க அக்கா தங்கை போன்று இருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அழகுக்கு அளவில்லை

உங்கள் அழகுக்கு அளவே இல்லை என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X