ஈமு கோழி பிசினஸ் தொடங்கிய நடிகை மதுமிதா
சினிமா நடிகையாக அறிமுகமாகி, சின்னத்திரையில் மன்னன் மகளாக நுழைந்துள்ள மதுமிதா, தனது கணவருடன் இணைந்து ஈமு கோழி பிசினஸ் தொடங்கியுள்ளார்.
குடைக்குள் மழை படத்தில் அறிமுகமானவர் மதுமிதா. அதன் பிறகு இங்கிலீஷ்காரன், யோகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்தபோது உடன் நடித்த பாலாஜியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் பிரியாணி படத்தில் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

இரட்டை வேடத்தில்
தற்போது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் மன்னன் மகள் தொடரில் விஷாலி, தாயம்மா என்ற இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் மதுமிதா.

வாள் சண்டை
மன்னன் மகள் தொடருக்காக தீவிரமாக வாள் சண்டை கற்று வருகிறார். இந்த பிசியான ஷெட்யூலிலும் ஈமுகோழி பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

நேரம் போதவில்லை
மன்னன் மகள் சீரியலில் இரண்டு வேடத்தில் நடிப்பதால் அதற்கே நேரம் சரியா இருக்கிறது. அதனால் வேறு சீரியல்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை என்கிறார் மதுமிதா.

சென்னை டூ ஹைதராபாத்
விரைவில் என் கணவர் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். தெலுங்கு படம் ஒன்றை இருவரும் சேர்ந்து தயாரிக்க இருக்கிறோம். எங்கள் வீடு ஹைதராபாத்திலும், மாமியார் வீடு சென்னையிலும் இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லாமல் தங்கியிருந்து நடிக்கிறேன்.

ஈமு கோழி பொருட்கள்
நானும் என் கணவர் சிவபாலாஜியும் இணைந்து ஷியானா என்ற பெயரில் ஹைதராபாத்தில் ஒரு நிறுவனம் தொடங்கியுள்ளோம். இது ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் அல்ல. ஈமு கோழியில் இருந்து சில பொருட்களை தயாரிக்கும் நிறுவனம். இது சக்சஸ் ஆனால் சென்னையில் தொடங்குவோம் என்கிறார் மதுமிதா.


Click it and Unblock the Notifications











