மலைகளில் இயற்கையை ரசிக்கும் மடோனா செபாஸ்டின்.. டோரா புஜ்ஜி போல ஒரு ட்ரிப்!
சென்னை: பிரேமம் படத்தில் கதாநாயகியாக நடித்து முதல் முறையாக திரையில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டின்
தமிழில் கடைசியாக கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் நடித்திருந்தார்
தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து தென்னிந்திய அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மடோனா செபாஸ்டின் டோரா புஜ்ஜி போல மலைகளைக் கடந்து இயற்கையை ஆனந்தமாக ரசிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

சென்சேஷனல் ஹிட்
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் இந்தியாவில் சென்சேஷனல் ஹிட் அடித்தது இந்த படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருக்க மடோனா செபாஸ்டின், சாய்பல்லவி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர் . இதில் மடோனா செபாஸ்டின் கடைசியாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்திருப்பார்.

காதலும் கடந்து போகும்
பிரேமம் கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழிலும் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற அழகிய காதல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டின் தமிழ் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்தனர். இந்த படம் வசூல் ரீதியாக சுமாரான வெற்றியை பெற்று இருந்தாலும் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது

விஜய் சேதுபதியுடன் இணைந்து
காதலும் கடந்து போகும் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் கவண்,ஜூங்கா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார். பின் பா. பாண்டி, வானம் கொட்டட்டும் மற்றும் சமீபத்தில் வெளியான கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

கொம்பு வச்ச சிங்கம்டா
நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக மலையாளத்தில் பல பாடல்களை பாடியுள்ளார். இயக்குனர் எஸ் ஆர் பிரபு இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா பக்கா கிராமத்து கதைகளில் உருவானது கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராக இருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் கிராமத்து பெண்ணாக நடிப்பில் அசத்தி இருப்பார்

டோரா புஜ்ஜி போல
இவ்வாறு தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ள மடோனா செபாஸ்டின் டோரா புஜ்ஜி போல காடு மலைகளை கடந்து இயற்கையை ரசிக்கும் அழகிய புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











