கையில் மல்லிகைப்பூ..படவாய்ப்புக்காக கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய மடோனா செபாஸ்டியன்!

சென்னை : மடோனா செபாஸ்டியன் இணையமே திணரும் வகையில் விதவிதமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

மடோனா செபாஸ்டியன் மலையாள திரைப்பட பின்னணி பாடகி மற்றும் திரைப்பட நடிகையாவார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்த மடோனா செபாஸ்டியன் ,அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

பிரேமம்

பிரேமம்

பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்த மடோனா,தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் பிரமேம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தால், மலையாளம் தெரியாத தமிழ் ரசிகர்களும் பிரேமம் படத்தை விரும்பி பார்த்தனர்.

காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும்

மடோனா செபாஸ்டியன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து, மீண்டும் கவண்,ஜூங்கா படங்களிலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதில், கவண் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து, தனுஷூடன் ப பாண்டி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு தோல்விப்படமாக அமைந்தது.

விதவிதமான புகைப்படம்

விதவிதமான புகைப்படம்

விஜய் சேதுபதி,தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள மடோனா செபாஸ்டியனுக்கு தற்போது பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால், எப்படியாவது பட வாய்ப்பை பெற விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இதற்கு லைக்குகள் வருகிறதே தவிர படவாய்ப்பு வந்த மாதிரி தெரியவரவில்லை.

படவாய்ப்புக்காக இப்படியா?

படவாய்ப்புக்காக இப்படியா?

இந்த நிலையில், மடோனா செபாஸ்டியன் சற்று முன்னர் செம கிளாமர் படங்களை பதிவு செய்துள்ளார். பாவாடை ஜாக்கெட்டுடன் முன்னழகை தெறியவிட்டு, கையில் மல்லிப்பூடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. 30 வயதாகும் மடோனா இந்த அளவுக்கு இறங்கி கிளாமரில் கலக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், படவாய்ப்புக்காக இப்படியா? என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X