மனம் விரும்புதே உன்னை... மடோனா செபாஸ்டின்!
சென்னை: நடிகையாக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பாடகியாகவும் மலையாள திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மடோனா செபாஸ்டின்
தமிழில் காதலும் கடந்து போகும், ஜூங்கா, பா பாண்டி, கவண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இப்பொழுது சசிகுமாருக்கு ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் நடித்துள்ள மடோனா செபாஸ்டின் வெளியிட்டுள்ள அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மூன்று கதாநாயகிகளில் ஒருவராக
மலையாளத்தில் வெளியாகும் பல படங்கள் இந்திய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிகை மடோனா செபாஸ்டின் நடித்து திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

கலவையான விமர்சனங்களை
முதல் படத்திலேயே முத்திரை பதித்த மடோனா செபாஸ்டின் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக அடுத்த படமே தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்து தமிழிலும் அறிமுகமானார். சூது கவ்வும் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் இன்றுவரை ஆகச் சிறந்த காதல் திரைப்படமாக இன்றுவரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது

தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக
காதலும் கடந்து போகும் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் கவண் மற்றும் ஜூங்கா ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். இதற்கிடையில் தனுஷுக்கு ஜோடியாக பா பாண்டி என்ற படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். கடைசியாக மடோனா செபாஸ்டின் நடிப்பில் தமிழில் வெளியான வானம் கொட்டட்டும் மிகச் சிறந்த குடும்ப திரைப்படம் என பாராட்டுகளைப் பெற்றது.

கிராமத்து பெண்ணாக
நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் மலையாள சினிமாவில் வலம் வரும் மடோனா செபாஸ்டின் மலையாளத்தில் பல பாடல்களை பாடி பிரபலமான பாடகியாக உள்ளார். இப்பொழுது சசிகுமாருக்கு ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் . முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாகவே மடோனா செபாஸ்டின் நடித்திருக்க இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது

கவர்ச்சி இல்லாத அழகிய புகைப்படங்கள்
தமிழ்,மலையாளம்,தெலுங்கு என இதுவரை தென்னிந்திய மொழிகளிலேயே நடித்துவந்த மடோனா செபாஸ்டின் இப்பொழுது நேரடி ஆங்கிலப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஹியூமன்ஸ் ஆஃப் சம்ஒன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களிலும் மிகப் பிரபலமாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளத்தை தெறிக்க விடுகிறார். அந்த வகையில் இப்பொழுது கண்களுக்கு குளிர்ச்சியான கவர்ச்சி இல்லாத அழகிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











