பச்சை உடையில் பால் போன்ற நிறத்தில் பற்ற வைக்கும் மடோனா செபாஸ்டின்!
சென்னை : நடிகர் நானி இரட்டை வேடங்களில் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் நடிகை மடோனா செபாஸ்டின்
தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் என தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள இவருக்கு தமிழில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது
சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் மிக விரைவிலேயே ரிலீஸ் ஆக இருக்க இப்போது பச்சை உடையில் பால் போன்ற நிறத்தில் பற்ற வைக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து
2015 ஆம் ஆண்டு மலையாள சினிமாவை திருப்பி போட்ட பிரேமம் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். பிரேமம் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து மாபெரும் வெற்றி பெற்றது. பிரேமம் வெற்றியைத் தொடர்ந்து பல மொழிகளில் இருந்தும் மடோனா வுக்கு வாய்ப்புகள் குவிந்தது.

பேவரைட் திரைப்படமாக
அந்த வகையில் தமிழுக்கு காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். விஜய் சேதுபதி இதில் ஹீரோவாக நடிக்க வித்தியாசமாக எதார்த்தமான காதல் கதையாக வெளியான காதலும் கடந்து போகும் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக உள்ளது அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து கவண் மற்றும் ஜூங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து இப்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.

ஜென்மத்தையும் மையப்படுத்தி
எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது நேச்சுரலான நடிப்பின் மூலம் ஹிட்டுகளை கொடுத்துவரும் நானி இப்பொழுது இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ஷியாம் சிங்கா ராய். நிகழ் காலத்தையும் பூர்வ ஜென்மத்தையும் மையப்படுத்தி உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது. இதில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக மடோனா செபாஸ்டின் பத்மாவதி என்ற வேடத்தில் நடித்துள்ளார்

பச்சை உடையில் பால் போன்ற நிறத்தில்
சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதுவரை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் மடோனா செபாஸ்டின் இப்பொழுது பச்சை உடையில் பால் போன்ற நிறத்தில் பற்றவைக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











