காஸ்ட்யூம் டிசைனர் ஆனார் 'கருத்தம்மா' மகேஸ்வரி

By Mayura Akilan

கருத்தம்மா புகழ் மகேஸ்வரி சீரியலில் நடித்த நேரம் போக மணப்பெண், மணமகன்களுக்கு ஆடை வடிவமைக்கும் பணியை செய்து வருகிறார்.

நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் மகேஸ்வரி. தமிழில் கருத்தம்மா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர், மன்னவரு சின்னவரு, சுயம்வரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமா டூ சீரியல்

சினிமா டூ சீரியல்

பின்னர் திருமணமாகி ஹைதராபாத்தில் செட்டிலான மகேஸ்வரி, சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த மை நேம் இஸ் மங்கம்மா காமெடி சீரியல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனது.

ஜெயாடிவி சீரியல்

ஜெயாடிவி சீரியல்

மகேஸ்வரி தற்போது ஜெயாடிவியில் அதே கண்கள் திகில் தொடரில் நடித்து வருகிறார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து மாதத்தில் இரண்டு வாரங்கள் சென்னை வந்து நடித்துக் கொடுக்கிறார்.

சென்னையில் தாய்வீடு

சென்னையில் தாய்வீடு

மகேஸ்வரியின் தாய் வீடு சென்னையில் இருப்பதால் அங்கு தங்கியிருந்து சீரியலில் நடித்து வருகிறார்.

காஸ்ட்யூம் டிசைனர்

காஸ்ட்யூம் டிசைனர்

மகேஸ்வரி ஒரு காஸ்ட்யூம் டிசைனர். சில படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். இப்போது மஹி ஐயப்பன் என்ற பெயரில் ஹைதராபாத், மற்றும் மும்பையில் டிசைனிங் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

மணப்பெண் ஆடைகள்

மணப்பெண் ஆடைகள்

பணக்கார வீட்டு திருமணங்களுக்கு மணமகன், மணமகளுக்கு உடைகளை டிசைன் செய்து தரும் நிறுவனம் இது. சீரியலில் நடித்த நேரம்போக மீதி நேரங்களில் டிசைனிங் நிறுவனத்தை கவனித்துக் கொள்கிறாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X