புது புது ஆங்கிளில் போட்டோஸ்.. மஹிமா நம்பியாரின் அழகு புகைப்படங்கள் !

கொச்சி : விக்ரம் பிரபு நடிப்பில் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த அசுரகுரு படம் சமீபத்தில் வெளியானது அதுவே நடிகை மஹிமா நம்பியாருக்கு கடைசியாக வெளியான படம்.

க்யூட்டான நடிகையாக பல படங்களில் நடித்து வந்தாலும் ஆர்யாவின் மகாமுனி படத்தில் சமத்துவம் பேசும் பெண்ணாக அனைவரையும் மிரட்டி இருப்பார்

போட்டோ ஷூட் களில் கலக்கி வரும் மஹிமா நம்பியார் இப்பொழுது கேண்டிட்களில் செம க்யூட்டாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

முக்கியமான வேடத்தில்

முக்கியமான வேடத்தில்

மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழில் முழு மூச்சில் நடித்து அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து வரும் நடிகை மஹிமா நம்பியாருக்கு சாட்டை அறிமுகப் படமாக அமைய முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதில் சமுத்திரக்கனி முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகை மஹிமா நம்பியார் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

திருப்பு முனையாக அமைந்தது

திருப்பு முனையாக அமைந்தது

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு அடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக குற்றம் 23 இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் மஹிமாவுக்கும் இது மிகப்பெரிய பெயரையும் பெற்றுத்தந்தது.

சவாலான கதாபாத்திரங்களை

சவாலான கதாபாத்திரங்களை

திரைப்படங்களில் க்யூட்டான கதாநாயகியாக வந்து செல்லும் மஹிமா ஆர்யா 2 வேடங்களில் நடித்து அசத்தி இருந்த மகாமுனி படத்தில் சமத்துவம் பேசும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி என்னால் க்யூட்டான கதாநாயகி அதுமட்டுமில்லாமல் சவாலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க முடியும் என நிரூபித்து இருந்தார்.

கடைசி படமாகும்

கடைசி படமாகும்

விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியாகும் சமீபத்திய படங்கள் எதுவும் பெரிதாக ஹிட்டாகவில்லை என்றாலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த அசுரகுரு படத்தில் மஹிமா நம்பியார் லீட் ரோலில் நடித்திருக்க சென்ற ஆண்டு இந்த படம் வெளியானது ஆனால் ஹிட்டாகவில்லை. இதுவே தமிழில் மஹிமாவுக்கு வெளியான கடைசி படமாகும்.

பொறாமைப்பட வைத்திருக்க

பொறாமைப்பட வைத்திருக்க

படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றாலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு போட்டோ ஷூட் களை நடத்தி அசத்தி வரும் இவர் சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருப்பவர். எக்கச்சக்கமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர் இப்பொழுது தெரியாமல் எடுக்கும் கேண்டிட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்க அதில் பிளாக் ட்ரஸில் செம ஸ்டைலிஸ்ஸாக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கேண்டிட் போட்டோகளிலேயே என்ன இவ்ளோ அழகாக இருக்கிறார் என அனைவரையும் பொறாமைப்பட வைத்திருக்க இப்பொழுது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X