டபுள் மாஸ்குடன் வந்து.. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மகிமா நம்பியார்!
சென்னை : சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான சாட்டை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மகிமா நம்பியார்.
இவர் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
திரைப்பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பகிர்வதால் அது பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக அமைகிறது.

சற்று ஆறுதல்
கொரோனாவின் 2வது அலை மிகவும் தீவிரமானதை தொடர்ந்து தமிழகத்தில் மே 10ந் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இரண்டு வாரம் காலம் பிறப்பித்த முழுஊரடங்கு உத்தரவை அடுத்து, கொரோனா நோய் தொற்று பரவல் பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளது. இது சற்று ஆறுதலான செய்தியாகவே உள்ளது.

விழிப்புணர்வு தேவை
கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட அனைவரும் தடுப்பூசிப் போட்டுக்கொள்வதே சிறந்த ஒன்றாக கூறப்படுகிறது. இருப்பினும் பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்து அச்சம் இருந்து வருகிறது. இதனால், தமிழக அரசு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டார்
அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை மகிமா நம்பியார், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

கைவசம் 2 படம்
சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த மகிமா, அனைவரும் அசந்துபோகும் அளவிக்கு குற்றம் 23 திரைப்படம் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து, இரவுக்கு ஆயிரம் கண்கள்,புரியாத புதிர், கொடி வீரன், மகாமுனி, அசுரகுரு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், பெல்பாட்டம், ஐங்கரன் என இரண்டு படங்களை கைவசம் வைததுள்ளார்.


Click it and Unblock the Notifications











