சந்திரமுகி 2 படத்தில் இணைந்தது குறித்து மஹிமா நம்பியார் உற்சாகம்.. லாரன்சுக்கு நன்றி!
சென்னை : நடிகை மஹிமா நம்பியார் தென்னிந்திய அளவில் படங்களில் நடித்து வருகிறார்.
சாட்டை படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்த மஹிமா, தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சந்திரமுகி 2 படத்தில், பி வாசு இயக்கத்தில் லாரன்சுடன் இணைந்து நடித்து வருகிறார் மஹிமா.

நடிகை மஹிமா நம்பியார்
நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் சில படங்களில் நடித்ததையடுத்து தமிழில் சாட்டை என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து அவரது மாணவியாக நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுத் தந்தது.

தமிழில் சிறப்பான என்ட்ரி
சாட்டை படம் தனக்கு சிறப்பான அளவில் தமிழை கற்றுக் கொள்ள உதவியதாக மஹிமா தெரிவித்திருந்தார். நெய்வேலியில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியபோது, தனக்கு சுத்தமாக தமிழ் பேசத் தெரியாது என்றும் மிகவும் கடினமாக இருந்ததாகவும் மஹிமா தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

ரஜினியுடன் இணைந்து நடிக்க ஆசை
கூட நடித்தவர்கள் தன்னை கலாய்த்ததை தொடர்ந்து தான் வெறியுடன் தமிழை எழுத, பேசக் கற்றுக் கொண்டதாகவும், அந்த சூட்டிங் எடுக்கப்பட்ட பள்ளியின் மாணவர்கள் தனக்கு இதற்கு உதவியதாகவும் மஹிமா தெரிவித்துள்ளார். தனக்கு அஜித் மிகவும் பிடிக்கும் என்றும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஆசை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல தனக்கு அனுஷ்கா ரோல் மாடலாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி 2 படத்தில் மஹிமா
இந்நிலையில் தற்போது வி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்சுடன் இணைந்து நடித்து வருகிறார் மஹிமா நம்பியார். இந்தப் படத்தை மிகவும் அதிகமாக எதிர்பார்த்துள்ள அவர், தற்போது ராகவா லாரன்சுடன் தான் இருக்கும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு ராகவா லாரன்ஸ், இயக்குநர் பி வாசு உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய அனுபவம்
ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார். சந்திரமுகி 2 படம் தனக்கு மிக மிக ஸ்பெஷல் என்றும் கூறியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்க முடியவில்லை என்றும் அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த போஸ்டர்கள்
ரஜினி, நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் பிரம்மாண்டமான ஹிட் கொடுத்தது. இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











