Don't Miss!
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- News
சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் அதிரடி டிரான்ஸ்பர்- காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
- Finance
இன்று தங்கம் விலை எப்படியிருக்கு.. கூடிருக்கா.. குறைஞ்சிருக்கா..!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிசயமே அசந்து போகும் உந்தன் அழகை கண்டு.. மஹிமா நம்பியாரின் அசத்தல் போட்டோ ஷூட்!
சென்னை: மலையாள சினிமாவில் அறிமுகமாகி இப்போது தமிழில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகை மஹிமா நம்பியார்.
சாட்டை,குற்றம் 23,இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மஹிமா நம்பியார் இப்பொழுது ஓ மை டாக் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கவே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க இப்பொழுது பாவாடை தாவணியில் அதிசயமே அசந்து போகும் அளவிற்கு கொள்ளை அழகில் உள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தங்க நிற க்ளிட்டர் புடவையில் மாதவன் பட நடிகை.. பார்க்கும் போதே பக்குனு ஆயிடுச்சு!

15 வயதிலேயே திரைத்துறையில்
நடிகர் சமுத்திரக்கனி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சாட்டை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். மலையாளத்தில் திலீப் குமார் நடிப்பில் வெளியான காரியஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் முதன்முறையாக திரையில் அறிமுகமானார். தனது 15 வயதிலேயே திரைத்துறையில் கால் தடத்தை பதித்து மஹிமா நம்பியார் இப்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக உள்ளார்

இயல்பான நடிப்பு
குறிப்பாக இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறது. சாட்டை வெற்றியை தொடர்ந்து குற்றம் 23 என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். அலட்டிக்கொள்ளாத இயல்பான நடிப்பு நடனம் மற்றும் பாடகி என பல திறமைகளை கொண்டுள்ள மஹிமா நம்பியார் அதைத்தொடர்ந்து நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் மகாமுனி உள்ளிட்ட படங்களும் இவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.

சமூகப் போராளியாக
கடைசியாக இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்த மகாமுனி திரைப்படத்தில் சமூகப் போராளியாக நடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார். அதுவரை படங்களில் க்யூட்டான கதாநாயகியாக வந்து சென்ற மஹிமா நம்பியார் மகாமுனியில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். மேலும் சமீபத்தில் மகாமுனி படத்தில் இவரது கதாபாத்திரத்தை பாராட்டி விருதும் வழங்கப்பட்டது.

பாவாடை தாவணியில்
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் ஆசிப் அலி நடிப்பில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தில் நடித்த ஒப்பந்தமாகி உள்ளார். தமிழில் மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாக ஓ மை டாக் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமூக வலைதளங்களில் மஹிமா நம்பியார் பதிவிடும் புகைப்படங்களை காணவே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க இப்போது பாவாடை தாவணியில் பார்க்க பார்க்க திகட்டாத கொள்ளை அழகு கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிசயமே அசந்துபோகும் நீங்க ஒரு அதிசயம் என வர்ணித்து வருகின்றனர்.