Mahima Nambiar: நீ கனவுகளா.. இயற்கையோடு இணைந்து நடந்த மஹிமா நம்பியார்!

சென்னை: நடிகை மஹிமா நம்பியார் தமிழில் சாட்டை என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த மஹிமா தொடர்ந்து குற்றம் 23, அகத்திணை, மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சந்திரமுகி 2, ரத்தம் முத்தையா முரளிதரனின் பயோபிக் 800 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 800 படத்தில் முத்தையா முரளிதரனின் மனைவியாக தன்னுடைய சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். ஆயினும் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார் மஹிமா நம்பியார். இயல்பிலேயே மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர் மஹிமா. இதை தனது பேட்டியொன்றிலும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். தனக்கு அதிகமாக கோபம் வராது என்றும், தன்னை யாராவது தொந்தரவு செய்தால் அந்த இடத்தைவிட்டு விலகி இருப்பேன் அல்லது அமைதியாக இருப்பேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். சத்தமாக பேசவோ, கோபப்படவோ மாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அவரது படங்களிலும் அது வெளிப்பட்டு வருகிறது.

Actress Mahima Nambiar photoshoot pictures

நடிகை மஹிமா நம்பியார்: நடிகை மஹிமா நம்பியார் தமிழ், மலையாள படங்களில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் சாட்டை என்ற படத்தில் மாணவியாக நடித்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர் இவர். தொடர்ந்து குற்றம் 23 படம் இவருக்கு சிறப்பான அடையாளத்தை கொடுத்தது. அகத்திணை, மகாமுனி உள்ளிட்ட படங்களும் சிறப்பாக அமைந்த நிலையில் சமீபத்தில் மஹிமா நம்பியார் நடிப்பில் சந்திரமுகி 2, ரத்தம், 800 ஆகிய படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகியுள்ளன. இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் மஹிமாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன.

மஹிமா ஆதங்கம்: மலையாளத்திலும் வாலட்டி, ஆர்டிஎக்ஸ் போன்ற படங்களும் மஹிமா நம்பியாருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. தெலுங்கிலும் பிரபல ஹீரோவுடன் மஹிமா கமிட்டாகியிருந்த ஒரு படத்தின் சூட்டிங் சில தினங்கள் நிகழ்ந்த நிலையில் அந்தப் படத்திலிருந்து தான் வெளியேற்றப்பட்டதாக சமீபத்திய பேட்டியில் வேதனை தெரிவித்திருந்தார். தனக்கு பதிலாக அந்த படத்தில் பிரபல ஹீரோயின் கமிட்டாகியதாகவும் தெரிவித்த மஹிமா நம்பியார், இதுபோன்ற சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். காரணமே இல்லாமல் இதுபோன்று நடக்கும் விஷயங்களை கடந்தே நடிகைகள் தங்களை நிரூபிக்க வேண்டியுள்ளதாகவும் கூறியிருந்தார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்: சமூகவலைதளங்களிலும் மஹிமா நம்பியார் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களையும் அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தறபோது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன. நீர்வீழ்ச்சிக்கு அருகில் இயற்கையான சூழலில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஜீன்ஸ் மற்றும் டீசர்ட்டில் மிகவும் இயல்பாக அதே சமயம் ரசிகர்களை கவரும்வகையில் இந்த புகைப்படங்களில் மஹிமா காணப்படுகிறார்.

சந்திரமுகி 2 படம்: மஹிமா நம்பியார் கிளாசிக்கல் நடனக் கலைஞர் மற்றும் பாடகி என்று கூறப்படும் நிலையில் இந்த திறமைகளை பயன்படுத்த படங்களில் அவருக்கு சரியான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. சந்திரமுகி 2 படத்திலும் அவர் ராகவா லாரன்சின் ஜோடியாக நடித்திருந்ததால் அந்தப் படத்திலும் நடனத்திறமையை பயன்படுத்தும் வாய்ப்பு அவருக்கு வாய்க்கவில்லை. தமிழில் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் மஹிமா. இதில் இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் மகாமுனி இவருக்கு சிறப்பாக அமைந்தது. இதை தவிர்த்து சொல்லிக்கொள்ளும் படியான கேரக்டர்கள் கிடைக்கவில்லை. தன்னை சிறப்பாக வெளிப்படுத்தும் கேரக்டருக்காக காத்திருக்கிறார் மஹிமா நம்பியார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X