பெண்ணாக உருவான வெண்மேகம்... மஹிமா நம்பியாரின் வேற லெவல் போட்டோஸ்!
சென்னை : தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை மஹிமா நம்பியார்.
தமிழில் சாட்டை படத்தின்மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது புதிய போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நடிகை மஹிமா நம்பியார்
தமிழ் மற்றும் மலையாளத்தில் தேர்ந்தெடுத்த கேரக்டர்களில் நடித்து வருபவர் நடிகை மஹிமா நம்பியார். தமிழில் சாட்டை படத்தில் இவர் மாணவியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவரது கேரக்டர் பேசப்பட்டது. இவருக்கு சிறப்பான துவக்கத்தையும் கோலிவுட்டில் ஏற்படுத்திக் கொடுத்தது.

தொடர்ந்த தமிழ் படங்கள்
இதையடுத்து மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், இரவுக்கு ஆயிரம் கண்கள், கொடி வீரன் என்று தொடர்ந்து தமிழில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். தான் ஏற்கும் கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

மகாமுனி படம்
மகாமுனி படத்தில் இவரது கேரக்டர் சிறப்பாக அமைந்தது. ஆர்யா, இந்துஜா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படத்தை சாந்தகுமார் இயக்கியிருந்தார். கடந்த 2019ல் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. சர்வதேச அளவில் பல விருதுகளையும் வென்று வருகிறது.
Recommended Video

சிறந்த துணை நடிகை
இதனிடையே ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படத்தில் நடித்திருந்த மஹிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இதன்மூலம் தனது நடிப்பில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். படத்தில் இவரது கேரக்டர் பேசப்பட்டது.

தேர்ந்தெடுத்த நடிப்பு
தேர்ந்தெடுத்த நடிப்பை இந்தப் படத்தில் இவர் வெளிப்படுத்தினார். படத்தின் ஓட்டத்திற்கு அவரது நடிப்பு வெகுவாக துணை புரிந்தது. முனி என்ற கேரக்டருக்கு இவர் செய்யும் உதவிகள் படத்தில் சிறப்பாக காணப்படும். இந்நிலையில் தொடர்ந்து அத்தகைய கேரக்டர்களில் மஹிமா நடித்து வருகிறார்.

புதிய போட்டோஷுட்
இந்நிலையில் தற்போது புதிய போட்டோஷுட் ஒன்றை எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மஹிமா நம்பியார். அழகான பிங்க் நிற புடவையில் சிறப்பான சிரிப்பை ரசிகர்களுக்கு பரிசாக அவர் கொடுத்துள்ளார். அவரது வெட்கச் சிரிப்பும் ரசிகர்களின் மனதை அள்ளுகிறது.


Click it and Unblock the Notifications











