நளினமான நடனம்.. லைக்குகளை அள்ளும்.. சாட்டை நடிகையின் வைரல் வீடியோ!
கொச்சி : நடிகை மஹிமா நம்பியார் கேஷா கேன்னிபெல் பாடலுக்கு நடனமாடிய டிக்டாக் வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
Recommended Video
கொஞ்சும் சிரிப்புடன்கொள்ளையடிக்கும் அழகுடன் தனது படங்களின் மூலம் நம் அனைவரையும் வசியம் செய்து வருபவர் மஹிமா நம்பியார். இவர் தனது 15 வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதன் முதலில் மலையாளத்தில் காரியஸ்தான் என்ற படத்தில் நடிகர் திலீபிற்கு தங்கையாக நடித்திருப்பார்.
பிறகு தமிழில் இயக்குனர் எம்.அன்பழகன் இயக்கத்தில் சாட்டை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் பள்ளி படிக்கும் சிறுமியாக நடித்திருப்பார்.

கை வசம் பல படங்கள்
மஹிமா தமிழில் சாட்டை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அது வெற்றி பெற்ற நிலையில், அதற்தடுத்து குற்றம் 23, கொடிவீரன்,மதுர ராஜா, மகாமுனி, அசுரகுரு என பேக் டு பேக் தமிழ், மற்றும் மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் G.V பிரகாஷ் குமாருடன் ஐங்கரன், நானு வீடு காது, மற்றும் பெயரிடப்படாத ஒரு மலையாள படம் என தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தலா ஒவ்வொரு படங்கள் இப்போது ரிலீசுக்காக காத்திருக்கிறது.

அனைவருக்கும்
சிறியவர்கள், இளசுகள், பெரியவர்கள் என அனைவரும் மிக சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு செயலியாக மாறிவிட்டது டிக் டாக். இதில் தங்களுக்கு பிடித்த நடிகர் அல்லது நடிகையின் வசனங்களுக்கு அவர் அவர்களுக்கு தெரிந்தவாறு வித்தியாசமான முறையில் வாயசைத்து நடிப்பார்கள். இதில் இப்போது பெரும்பாலான நடிகர்களுக்கு சேர்ந்துள்ளனர். இதனை அனைவரும் பொழுது போக்காகவே செய்து வருகின்றனர் .

கண்ணால் நடனம்
தனது அழகான புருவத்தை சிறிதளவு வெட்டியுள்ளார்(பிகில் விஜய் போன்று ) மஹிமா அதற்காக அவரை ரசிகர்கள் கேள்வியால் துளைத்தெடுத்தனர். அதற்கு பதிலளிக்குக்கும் விதமாக இப்போது அவர் ஒரு டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது க்யூட்டான முகபாவனைகளுடன் ஒரு மலையாள பாடல் ஒன்றிக்கு புருவத்தை அசைத்து அனைவரையும் மயக்கும் வண்ணம் டிக் டாக் செய்து வெளியிட்டு , இப்போது தெரிந்திருக்கும் நான் ஏன் எனது புருவத்தை சிறிது வெட்டினேன் என்று அந்த கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

குறும்பு கலந்த நடிப்பு
யார் யாரிடம் எப்படி சிரிக்க வேண்டும் என சிரிப்புகளில் இத்தனை விதம் இருக்கிறது என்று ரசிகர்களுக்கு மற்றுமொரு டிக்டாக் மூலம் செய்து காட்டி அனைவரையும் ஈர்த்துள்ளார். அந்த வீடியோ அனைவராலும் வைரலாக பகிரப்பட்டு வந்தது. அதில் நண்பர்களிடம், காதலர்களிடம், நெருங்கிய நண்பர்களிடம் என ஒவ்வொருவரிடமும் எப்படி சிரிக்கவேண்டும் என தன்னுடைய குறும்பு கலந்த நடிப்பால் வெளிப்படுத்தி இருப்பர் மஹிமா

தனித்துவமான நடனம்
இவ்வாறு பல வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு கொண்டே இருக்கிறார், சமீபத்தில் அவர் வெளியிட்ட கேஷா கேன்னிபெல் பாடலுக்கு நடனம் ஆடி பல ரசிகர்களை ஈர்த்துள்ளார். பல நடிகைகள் இதனை செய்தாலும் இவர் தனித்துவமான நடனம் அனைவரிடமும் இந்த வீடியோ பெரும் அளவில் பகிரப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications











