Mahima Nambiar: இந்த வெட்கத்திற்கு என்ன விலை வைக்கலாம்.. மஹிமா நம்பியார் போட்டோஷுட் போட்டோஸ்!
சென்னை: நடிகை மஹிமா நம்பியார் மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சாட்டை படம் மூலம் தமிழில் பள்ளி மாணவியாக அறிமுகமான மஹிமா நம்பியார், தமிழில் தொடர்ந்து சந்திரமுகி 2, ரத்தம், 800 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆர்டிஎக்ஸ் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் மஹிமாவிற்கு சிறப்பான வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது. முன்னதாக இவரது நடிப்பில் வெளியான நம்பியார், குற்றம் 23, அகத்திணை மகாமுனி ஆகிய படங்களும் மஹிமாவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
முன்னதாக தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவருவது பிடித்திருப்பதாக கூறியிருந்தார் மஹிமா. இதேபோல திரையுலகம் பெண்களுக்கு பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு பதிலளித்த மஹிமா, தன்னை பொருத்தவரை தனக்கு தவறான எந்த அனுபவமும் ஏற்படவில்லை என்று பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். யாரும் தன்னை தவறாக நடத்தவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். தன்னுடைய முதல் படமான சாட்டை படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த மஹிமா நம்பியார், தொடர்ந்து அடுத்தடுத்த சூப்பர்ஹிட் ஹீரோயினாக வலம்வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்ந்தெடுத்தப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

நடிகை மஹிமா நம்பியார்: நடிகை மஹிமா நம்பியார் சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான சாட்டை படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து நம்பியார், குற்றம் 23, அகத்திணை, மகாமுனி, அண்ணாதுரை, புரியாத புதிர் ஆகிய படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் பிசியாக நடித்துவரும் மஹிமா நம்பியார் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் படம் மிகப்பெரிய வெற்றியையும் மஹிமா உள்ளிட்ட படக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பையும் பெற்றுத் தந்தது. தமிழிலும் அடுத்தடுத்து ரத்தம், சந்திரமுகி 2, 800 என அடுத்தடுத்த படங்கள் இவரது நடிப்பில் வெளியாகின.

மஹிமா மகிழ்ச்சி: முன்னதாக பேட்டியொன்றில் பேசிய மஹிமா நம்பியார், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருவது பிடித்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். பெண்களுக்கு திரையுலகம் பாதுகாப்பாகவே இருப்பதாகவும் தனக்கு எந்தவிதமான மோசமான அனுபவமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தமிழில் சாட்டை மூலம் அறிமுகமான மஹிமா நம்பியார், மலையாளத்தில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான காரியஸ்தன் என்ற படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்தப் படத்தில் ராதிகா என்ற இவரது கேரக்டர், ரசிகர்களுக்கு விருப்பமானதாக அமைந்தது.

அடுத்தடுத்த படங்கள்: தமிழில் சாட்டை படத்தை தொடர்ந்து மொசக்குட்டி, என்னமோ நடக்குது போன்ற படங்களிலும் நடித்திருந்தார் மஹிமா நம்பியார். தொடர்ந்து மலையாளத்தில் மம்முட்டியுடன் இவர் நடித்த மாஸ்டர் பீஸ் படமும் சிறப்பாக அமைந்தது. மஹிமா நடிப்பில் மட்டுமில்லாமல் மிகசிறப்பான கிளாசிக்கல் நடனக்கலைஞர் மற்றும் பாடகியாகவும் உள்ள நிலையில், அவரது படங்களில் இவை சரியாக பயன்படுத்தப்படவில்லை என்ற குறை அவருக்கு உள்ளது. கடந்த 2018 முதல் இவர் நடித்த படங்களில் இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி போனற் படங்கள் அழுத்தமான கேரக்டர்களுடன் வெளியாகி மஹிமாவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தன.
மஹிமா சமீபத்திய போட்டோஷுட்: இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் மஹிமா நம்பியாரின் தற்போதைய போட்டோஷுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சிவப்பு நிற கவுன் டைப் உடையுடன் இந்தப் புகைப்படங்களில் தனக்கேயுரிய அழகான புன்னகையை ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளன.இவரை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய் கணேஷ் படம் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











