என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? பிகில் நடிகையிடம் கேட்ட பிரபலம்.. பதில பாருங்க மக்களே!
Recommended Video
சென்னை: என்னை கல்யாணம் செய்துக்கொள்கிறாயே என கேட்ட பிரபலத்திற்கு பட்டென சம்மதம் சொல்லியிருக்கிறார் நடிகை இந்துஜா.
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இவர். பில்லா பாண்டி, 60வயது மாநிறம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அண்மையில் வெளியான விஜயின் பிகில் படத்தில் வேம்பு என்ற கதாப்பாத்திரத்தில கலக்கியிருந்தார் இந்துஜா. சோஷியல் மீடியாவிலும் துருதுருவென இருக்கிறார் இந்துஜா.

கல்யாணம் பண்ணிக்கிறீயா?
இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரின் அழகை புகழ்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்துஜாவின் போட்டோவை பார்த்து பிரமித்து போன நடிகை மகிமா நம்பியார், என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா? என கேட்டார்.

காதல் திருமணம் செய்துக்கலாம்
அதற்கு சற்றும் யோசிக்காமல் பட்டென பதில் கொடுத்திருக்கிறார் இந்துஜா. அதாவது, வா.. காதல் திருமணம் செய்துகொள்வோம் என கூறியிருக்கிறார்.

நீங்கள் எடுத்துக்காட்டு
அவர்களின் கான்வர்சேஷனை பார்த்த ரசிகர்கள், இங்கு என்ன நடக்கிறது என கேட்டுள்ளனர். மேலும் இந்துஜா, தமிழ் பெண்களின் அழகுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறியிருக்கின்றனர்.

சாட்டை படத்தில்
நடிகை இந்துஜாவும் மகிமா நம்பியாரும், மகாமுனி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மகிமா நம்பியார் சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார்.
மலையாளம் கன்னடம்
தொடர்ந்து என்னமோ நடக்குது, மொசக்குட்டி, புரியாத புதிர், கொடி வீர்ன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார் மகிமா நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications