மெஸ்மரைசிங் தேவதை.. மேனி அழகை மெனக்கெட்டு பளிச்சிட்ட மெஹரீன்.. ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை : மாடல் அழகி மெஹரீன் புது போட்டோசூட் வெளியிட்டுள்ளார். இது தற்போது 80 ஆயிரம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது. அழகான அதிர்ச்சி தரும் தேவதை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாடல் துறையில் இருந்து திரைத்துறைக்கு வருபவர்களுக்கு எப்போதுமே திரைத்துறையில் ஒரு நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி வந்தவர்களுக்கு திரைத்துறையில் நல்ல பிரகாசமான எதிர்காலம் அப்படி திரைத்துறைக்கு வந்தவர் தான் மெஹரீன்.

Actress mahreen pirzada viral post

2013 ஆம் ஆண்டு டேரோன்டோவில் நடைபெற்ற மிஸ் தெற்காசிய அழகிப்போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார். பின் பல மாடலிங் நிறுவனங்களுக்கு மாடலிங்காக இருந்துள்ளார்.மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் மெஹரீன்.

இதன் பின் திரைதுறையில் இருந்த ஆர்வத்தால் நல்ல வாய்ப்புக்காக காத்து இருந்த அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து. இதையடுத்து தெலுங்கில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். தனது முதல் திரைப்படமான 'கிருஷ்ணா காடி வீர பிரேம கத' என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தனது இரண்டாவது படத்திலேயே பாலிவுட் சென்றார். இதையடுதது இவருக்கு தமிழில் நடிக்க வாய்பு கிடைத்தது, இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்திருத்தார். இந்த படம் ஒரளவு பேசப்பட்டது.

பின்னர் தெலுங்கு, தமிழ் என மாறி மாறி நடித்த இவர் பஞ்சாப் மொழி படங்களில் நடிக்கத் துவங்கினார். இவர் கடைசியாக தெலுங்கில் நடித்த சாணக்யா படம் இவருக்கு அங்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது தனுஷ் நடிக்கும் பட்டாசு படத்தில், இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது.

Actress mahreen pirzada viral post
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பதும், அவ்வப்போது வித வித புகைப்படங்களை போடுவதும் இப்போது ட்ராண்டாகி உள்ளது. இதை, கருத்தில் கொண்டுள்ள மொஹரீன், ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

வெள்ளை நிற மேல் சட்டையில் ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இது இப்போது வைரலாகி, 80 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அழகான அதிர்ச்சி தரும் தேவதை என்று கருத்து பதிவிட்டுள்ளனர். இந்த புகைபடங்களை பார்க்கும் பொழுது பட்டாசு படம் ரீலிசுக்கு பிறகு இவர் தமிழில் முன்னணி நடிகையாக வருவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X