அந்த ரூமில் அதுதான் நடந்தது.. இன்னமும் அதை நயன்தாரா மறக்கவில்லை.. நடிகை சொன்ன சீக்ரெட்

சென்னை: நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இதுவரை மொத்தம் 75 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் அன்னபூரணி என்ற படத்தில் நடித்திருந்தார். படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் நயன்தாராவின் ஆரம்பகால வாழ்க்கை குறித்து நடிகை மாலா பார்வதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா அங்கு டிவி தொகுப்பாளராக இருந்து பிறகு ஒரு படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் ஐயா படம் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதுதான் தமிழில் அவருக்கு முதல் படமும்கூட. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர் அவர். ஆனால் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

Actress Mala Parvathy Shares About Actress Nayanthara Early Stage

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா கடந்த வருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டனர். உயிர், உலக் என்று மகன்களுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் தனது நடிப்பு பயணத்தை தீவிரமாக தொடர்ந்துவருகிறார் நயன்தாரா. அவருக்கு விக்னேஷ் சிவனும் முழு சப்போர்ட் செய்துவருகிறார்.

ஹிந்தியில் என்ட்ரி: இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கில் கலக்கி அவர் தற்போது ஜவான் படத்தின் முலம் ஹிந்தியில் என்ட்ரி ஆகியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார் இந்தப் படம் வெற்றி பெற்றால் பாலிவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருந்தார். அவர் கணக்குபடி ஜவான் படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்தப் படம்: இந்த சூழலில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கவனம் ஈர்த்ததால் நயனுக்கு அடுத்த ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கவிருக்கும் படத்தில் நயன் நடிக்கிறார் என்றும் அதற்காக 12 கோடி ரூபாய் அவருக்கு சம்பளம் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. கடைசியாக தமிழில் அவர் அன்னபூரணி படத்தில் நடித்தார். அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்துவருகிறார்.

மாலா பார்வதி பேட்டி: இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு நயன்தாரா வேலை செய்த சேனலில் பணியாற்றியவரும், நடிகையுமான மாலா பார்வதி பேட்டி ஒன்று அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கேரளாவில் டிவி சேனல் ஒன்றில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் டயானா மரியம் குரியன் என்கிற நயன்தாராவை முதன்முறையாக பார்த்தேன். பொதுவாக எனக்கு மேக்கப் போட்டுவிட பிடிக்கும். அதனால் அந்த சேனலின் மேக்கப் ரூமுக்கு நான் பொறுப்பாக இருந்தேன்.

சமயம் நிகழ்ச்சி: அப்போது சமயம் என்னும் நிகழ்ச்சிக்காக தன் பெற்றோருடன் வந்திருந்தார் டயானா. அவருக்கு நான் மேக்கப் போட்டுவிட்டுக்கொண்டிருந்தபோது அவரது பெற்றோர்கள் என்னிடம், 'எங்கள் மகளுக்கு இரண்டு பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன. இதில் எந்த இயக்குநர் படத்தில் நடிக்கலாம் என கேட்டார்கள். நான், சத்யான் அந்திக்காடு இயக்கத்தில் கரியரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்தேன். அதன்படியே சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் கரியரை தொடக்கினார் அவர்.

அன்னபூரணி: பிறகு பல வருடங்கள் கழித்து அன்னபூரணி ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் நயன்தாராவை பார்த்தேன். அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருக்கிறார். அவருக்கு என்னை நினைவிருக்குமா என்று நினைத்தேன். ஆனால் என்னை பார்த்தவுடன் என்னிடம் வந்து ரொம்பவே சாதாரணமாக பேசினார். இத்தனை ஆண்டுகள் என்னை நினைவு வைத்திருந்து அவர் பேசியது சந்தோஷமாக இருந்தது. தான் ஒரு பெரிய ஸ்டார் என்று பந்தாவே அவரிடம் இருக்காது. நான் சைவம்தான் சாப்பிடுவேன் என்று தெரிந்து எனக்காக சாப்பாடு வரவழைத்து கொடுத்தார்.

சினிமா பின்னணி இல்லாமல் வந்து இவ்வளவு சாதித்திருக்கும் நயனை பார்க்கும்போது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது" என்றார். முன்னதாக மாலா பார்வதி கேரளாவில் சீரியல்கள், சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X