அலைபாயும் கூந்தலோடு கடற்கரையை நோக்கி செல்லும் மலாக்கா - வைரலாகும் போட்டோ
Recommended Video
மும்பை: நடிகை மலாக்கா அரோரா மேலாடை இல்லாமல் வெள்ளை பிகினியில் கவர்ச்சியாக தோற்றமளிப்பது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கானவர்கள் லைக் செய்துள்ளனர். நடிகை மலாக்கா, கடலையும் அதில் சங்கமிக்கத் துடிக்கும் சூரியனையும் நோக்கியவாறு அஸ்தமன நேரத்தில் நடந்து போகும் போது புகைப்படக் கலைஞர் அவர் பின்னால் இருந்து போட்டோவை அழகாக எடுத்துள்ளார்.
நடிகை மலாக்கா அரோரா எப்போதும் தனது ரசிகர்களை பயங்கர பேஷன் சென்ஸ் மற்றும் உறுதியான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையால் ஊக்கப்படுத்தியுள்ளார். இந்த 45 வயதிலும் அவரது அழகுக்கும், ஆரோக்கியமான உடலுக்கும் இதுதான் கரணம்.
தற்போது, தனது பழைய புகைப்படங்களில் சிலவற்றை மீண்டும் பதிவிடுவதன் மூலம் அவரது பழைய நினைவுகளை கிளறியுள்ளார். இந்த புகைப்படத்தை சமீபத்தில் தான் புகைப்படக் கலைஞர் ஃபாரோக் சோதியாவால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தற்போது அந்த புகைப்படங்களை நடிகை மலாக்கா அரோராவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவை ரசிகர்களை கவர்ந்ததோடு சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
மலாக்கா அரோராவின் கவர்ச்சியான புகைப்படம், பிகினியைக் காட்டி, மேலாடை எதுவும் இல்லாமல் தோற்றமளிப்பது இப்போது வைரலாகி வருகிறது. நடிகை மலாக்கா, கடற்கரையையும் சூரிய அஸ்தமனத்தையும் எதிர்கொண்டு நடந்து போகும் போது புகைப்படக் கலைஞர், அவர் பின்னால் இருந்து ஃபோட்டோவை எடுத்துள்ளார்.
திறந்த மற்றும் காற்று நிறைந்த கூந்தல் மலாக்காவின் மேலாடையை மறைத்திருக்கலாம் என்பதை அந்த ஃபோட்டோ சித்தரிக்கிறது. நடிகை மலாக்காவின் இந்த கடற்கரை ஃபோட்டோ மூன்று மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது,
இலியானா டி க்ரூஸ், கேப்ரியெல்லா டிமெட்ரியேட்ஸ் மற்றும் ஜரீன் கான் போன்ற நடிகைகள் இந்த அழகிய ஃபோட்டோ குறித்து தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். அழகான ஃபோட்டோவை கண்டுபிடிக்க மலாக்காவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்க வேண்டும்.
மேலும் அவர் அடிக்கடி தொடர்ச்சியாக இதே போல் பிகினி போஸ்களில் தனது வித்தியாசமான நிறத்தில் அழகான உடலை காண்பிக்கிறார். அவரது சமீபத்திய ஃபோட்டோக்கள் ரசிகர்களை பிரமிக்க வைக்கிறது. இப்படியே போனால் சோசியல் மீடியாவில் கவர்ச்சி காட்டுவதும் பொழுது போக்கு ஆகிவிடும்.


Click it and Unblock the Notifications