ரூம் எல்லாம் போட்டாச்சு..வேஸ்ட் ஆகிடும்.. 5 நிமிட சீனுக்கு நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட டைரக்டர்
சென்னை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை பலர் தங்களது வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து சமீபகாலமாகவே நடிகைகள் மௌனம் கலைத்துவருகிறார்கள். இந்தச் சூழலில் துணை நடிகை மாலதி என்பவர் தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை குறித்து லேட்டஸ்ட் பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார்.
சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று பல காலமாக உண்டு. அதனை உறுதிப்படுத்தும்படிதான் சினிமாவில் பணிபுரியும் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர் எல்லாம் ரொம்பவே கம்மிதான். நடிப்பில் பெண்கள் அதிக அளவு இருந்தாலும் அவர்களுக்கு உருவாக்கப்படும் பிரச்னை மற்ற பெண்களை திரைத்துறைக்குள் வருவதற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அப்படி உள்ள பிரச்னைகளில் தலையாய பிரச்னைதான் அட்ஜஸ்ட்மெண்ட்.

அட்ஜெஸ்ட்மெண்ட்: சினிமாவில் அறிமுகமாக வேண்டுமா, தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமா அதற்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சிலர் ஓபனாகவும், மறைமுகமாகவும் நடிகைகளிடம் அப்ரோச் செய்யும் வழக்கம் காலங்காலமாக இருந்துவருகிறது. பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இந்தக் காலத்திலும் அந்த அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் ஓய்ந்தபாடில்லை என்பதுதான் கள எதார்த்தம்.
வாய் திறந்த நடிகைகள்: சில வருடங்களுக்கு முன்னர் எல்லாம் தங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்தால் சைலெண்ட்டாக மறுத்துவிட்டு அதனை பொதுவெளியில் சொல்லாமல் இருந்தார்கள் நடிகைகள். இப்போது பலரும் அதுகுறித்து வெளிப்படையாக பேசிவருகிறார்கள். அது ஆரோக்கியமான விஷயமான ஒன்றகாவே பார்க்கப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன், நடிகை வரலட்சுமி உள்ளிட்டோரும் தங்களுக்கு அட்ெஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்ததாக ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாய் திறந்த மாலதி: சில நாட்களுக்கு முன்புகூட நடிகை தேவி ப்ரியாவும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருந்தார். அதேபோல் பலரும் தங்களது மௌனத்தை கலைத்து தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துவருகின்றனர். அந்தவகையில் துணை நடிகை மாலதி என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டில் ஒன்றில் தனக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்னை குறித்து பேசியிருக்கிறார்.
மாலதி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஒரு படத்தில் சமீபத்தில் நடித்து முடித்தேன். அதில் என்னுடைய கேரக்டர் வெறும் ஐந்து நிமிடங்கள்தான் வரும். அந்தப் படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு இயக்குநர் என்னை அழைத்தார். அப்போது அவர் என்னிடம் தயாரிப்பாளர் ரூம் எல்லாம் போட்டுவிட்டார். வேஸ்ட் ஆகிடும் என சொல்லி என்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொள்ள சொன்னார்.
மேனேஜரின் டார்ச்சர்: அவர் அப்படி சொல்லியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரை திட்டியும்விட்டேன். வெறும் ஐந்து நிமிட ரோலுக்காக என்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்னார்கள். ஒருநாள் ஷூட்டிங்கிற்கு மூன்று நாட்கள் ரூமில் தங்க வைத்தார்கள். அப்போது அங்கு மேனேஜராக இருந்தவர் என்னை அடிக்கடி வந்து சந்தித்தார். அந்த சமயத்தில் மேலே விழுவது, முத்தம் கொடுப்பது என எல்லை மீறி நடந்துகொண்டார். அதனை அப்போது வேறு வழியில்லாமல் பொறுத்துக்கொண்டேன்.ஷூட்டிங் முடிந்த பிறகு அந்த மேனேஜரையும் திட்டிவிட்டுதான் வந்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











