விஜய்யுடன் அந்த குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடும் போது கர்ப்பமாக இருந்தேன்...மாளவிகாவின் கலகல பேட்டி!

சென்னை : தளபதி விஜய்யுடன் குத்துப்பாட்டுக்கு நடனமாடும் போது கர்ப்பமாக இருந்ததாக நடிகை மாளவிகா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகை மாளவிகா, தமிழ் படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி என 5 மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், அஜித், விஜய், ரஜினிகாந்த், கமல் போன்ற டாப் நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்த விலகி மாளவிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு கோல்மால் படத்தில் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

நடிகை மாளவிகா

நடிகை மாளவிகா

மாடல் அழகியான மாளவிகா, 1999ம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

அனைவரின் ஃபேவரைட் பாடல்

அனைவரின் ஃபேவரைட் பாடல்

டஸ்கி நிறத்தில் இருக்கும் மாளவிகா, ஒரு சாயலில் நடிகை ரோஜாவைப் போலவே இருப்பார். வெற்றிகொடி கட்டு படத்தில் கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு பாடலுக்கு இவர் போட்ட ஆட்டத்தை ரசிகர்கள் இப்போது வரை மறக்காமல் நினைவு வைத்து இருக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல், வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலும் அனைவரின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.

ரீ எண்ட்ரி

ரீ எண்ட்ரி

தமிழில் இவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், தெலுங்கு பக்கம் சென்ற மாளவிகா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த மாளவிகா பொன் சரவணன் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி உள்ள கோல்மால் படத்தில் நடித்துள்ளார். நகைச்சுவைத் திரைப்படமான இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது.

மாளவிகா பேட்டி

மாளவிகா பேட்டி

இந்நிலையில், நடிகை மாளவிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் தனது திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, என்னுடைய முதல் படமே அஜித்துடன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்றும் இப்போது வாய்ப்பு கிடைத்தால் அஜித்,விஜய்யுடன் சேர்த்து நடிப்பேன் என்றார்.

கர்ப்பமாக இருந்தேன்

கர்ப்பமாக இருந்தேன்

மேலும், விஜய்யுடன் குருவி படத்தில் வரும் 'டன்டன்னா டர்னா குருவியோட பாட்டு' பாடலின் போது நான் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும், மருத்துவர்கள் கண்டிப்பாக டான்ஸ் ஆடக்கூடாது என்ற கூறிவிட்டதால், நடன இயக்குநர் எனக்கு கஷ்டமே இல்லாத டான்ஸ் ஸ்டேப்பை கொடுத்தார் என்றும், இல்லை என்றால் அந்த பாடலில் இன்னும் கடுமையான ஆட்டம் போட்டு இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும்,கோல்மால் படத்தை அனைவரும் பாருங்க அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X