கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!

சென்னை : மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாகவும் அதேசமயம் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை மாளவிகா மேனன்.

மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமான விழா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

திரைப் படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இதுவரை கவர்ச்சி இல்லாத புகைப்படங்களையும் வீடியோக்களையும் மட்டுமே வெளியிட்டுவந்த மாளவிகா மேனன் இப்பொழுது சிங்கிள் பீஸ் ட்ரஸில் கவர்ச்சி ததும்ப வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாவ் என அசந்து போயுள்ளனர்.

இரு மொழிகளிலும்

இரு மொழிகளிலும்

மலையாள தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் நடிகை மாளவிகா மேனனும் ஒருவர். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த இவர் இப்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கால் தடத்தை பதித்து

கால் தடத்தை பதித்து

குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து இப்போது ஹீரோவாக உருவாகியிருக்கும் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக அறிமுகமான விழா திரைப்படத்தில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக கால் தடத்தை பதித்து மாளவிகா மேனனுக்கு சொல்லக்கூடிய வகையில் ரசிகர்கள் இன்றளவும் இருந்துவருகின்றனர் .

பிளாக்பஸ்டர் வெற்றிகளை

பிளாக்பஸ்டர் வெற்றிகளை

இளமை மாறாத முகம் கவர்ச்சி காட்டாத நடிப்பு என ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பப் பெண்களையும் கவர்ந்த இவர் வெத்துவேட்டு,பிரம்மன், நிஜமா நிழலா என ஒரு சில திரைப்படங்கள் நடித்து இருந்தாலும் அவை அனைத்தும் கை கொடுக்காததால் மீண்டும் மலையாளத்திலேயே நடிக்க சென்ற இவர் அங்கு பல பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் வென்று வருகிறார்.

பேய்மாமா

பேய்மாமா

தமிழ் ரசிகர்கள் இவரை திரைப்படங்களில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அருவா சண்டை மற்றும் பேய்மாமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துவரும் இவர் சர்ப்ரைஸாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறு செய்து வருகிறார்.

அழகிகளின் இளவரசி

அழகிகளின் இளவரசி

இதுவரை கவர்ச்சி இல்லாத போட்டோக்களை மட்டுமே பதிவிட்டு வந்த மாளவிகா இப்பொழுது கவர்ச்சிக்கே தண்ணி காட்டும் அளவுக்கு சிங்கிள் பீஸ் ட்ரஸில் தொடை அழகு தெரிய தங்கச்சிலை போல ஆரவாரமில்லாமல் அம்சமாக பல்வேறு கோணங்களில் போஸ் கொடுத்துக்கொண்டு கவர்ச்சி வழியே வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்து "அழகிகளின் இளவரசி" என ரசிகர்கள் வர்ணித்து வர இந்த அதிரடி ஹாட் போட்டோக்கள் இப்பொழுது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X