ஊர்வசியாக மாறிய மாஸ்டர் பட நடிகை.. அடடா என்ன ஒரு அழகு!
சென்னை : நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவிற்கு பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இப்பொழுது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கார்த்திக் நரேன் ஸ்டைலில் பாதியும், தனுஷ் ஸ்டைலில் பாதியுமாக மாறன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இணையதளத்தை புரட்டிப் போடும் மாளவிகா மோகனன் இப்பொழுது அதீத கவர்ச்சியில் தேவலோகத்து ஊர்வசி போல கொள்ளை அழகில் உள்ள புகைப்படங்களை பதிவிட்டு வைரலாகி வருகிறார்.

எதிர்பார்த்த அறிமுகத்தை கொடுக்கவில்லை
மாநகரம், கைதி வெற்றிகளுக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கியிருந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அறிமுகத்தை கொடுக்கவில்லை.

தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இப்படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் . நடிப்பு நடனம் கவர்ச்சி என அனைத்திலும் கைதேர்ந்த இவருக்கு தமிழில் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது மாஸ்டர் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது
இந்த நிலையில் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் மாறன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவு பெற்றுள்ளது. முறையாக தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் கூட்டணி இணைந்திருப்பதால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது.மேலும் மாறன் கார்த்திக் நரேன் ஸ்டைலில் பாதியும், தனுஷ் ஸ்டைலில் பாதியுமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

ஊர்வசி போல கொள்ளை அழகில்
இந்தியிலும் சில திரைப் படங்களில் ஒப்பந்தமாகி வரும் மாளவிகா மோகனன் இப்பொழுது தேவலோகத்தில் உள்ள ஊர்வசி போல கொள்ளை அழகில் மேலாடை எதுவும் இல்லாமல் அதீத கவர்ச்சியில் ஊர்வசி என பதிவிட்டுள்ள இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தை புரட்டிப் போட்டுள்ளது. மேலும் இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் உருக உருக வர்ணித்து வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











