Just In
- 9 min ago
இவர்தான் என் அன்புக்குரியவர்.. காதலரின் மடியில் அமர்ந்து அறிமுகம் செய்து வைத்த பிரபல நடிகை!
- 21 min ago
பேரனுடன் குழந்தையை போல் கொஞ்சி மகிழும் சுரேஷ் தாத்தா.. தீயாய் பரவும் வீடியோ!
- 34 min ago
சினிமா இவரது விரல் நுனியில்.. 1931 - 2021 வரை வெளியான படங்களின் தகவல் களஞ்சியம் ஜானகிராமன் பேட்டி!
- 1 hr ago
பண்ண டேமேஜ் போதாதா.. மறுபடியும் முதல்ல இருந்தா.. பிக்பாஸ் மறு ஒளிபரப்பை பங்கமாக்கும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
எங்களுக்கும் கொரோனா தடுப்பூசி கொடுங்க... இந்தியாவிடம் தடுப்பூசி கேட்கும் இலங்கை!
- Automobiles
அதிகரிக்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!! 300வது ஷோரூமை இந்தியாவில் திறந்தது!
- Finance
அல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..!
- Sports
வேற வழியே இல்லை.. அந்த ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிளாக் அண்ட் பிளாக்கில் மாஸ்டர் நாயகி.. அசந்துபோன ரசிகர்கள்!
சென்னை : தமிழ் ரசிகர்களால் இப்போது பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் ரிலீசை பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் அந்த தருணத்திற்காக நடிகை மாளவிகா மோகனன் காத்துக்கொண்டிருக்கிறார்.
பேட்ட திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகியாக மாளவிகா மோகனுக்கு இந்த திரைப்படம் வெளியானால் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வரும் என நினைக்கின்ற நிலையில் வரும் பொங்கலுக்கு மாஸ்டர் ரிலீஸ் ஆகிறது என சொல்லப்படுகிறது.
ஜியோ சாவனில் டாப் 5 தமிழ் இசை கலைஞர்கள்... ராக் ஸ்டார் அனிருத்துக்கு முதலிடம்!
மலையாளத்தில் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள மாளவிகா மோகனன் இப்பொழுது விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்தி வெப் சீரியலிலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில் இப்பொழுது ஹாலிவுட் ஹீரோயின் போல பிளாக் அண்ட் பிளாக்கில் சும்மா மாஸாக போஸ் கொடுத்திருக்கும் மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தை கலக்கி வருகிறது.

சூறாவளி போல
தமிழில் கதாநாயகியாக நடித்த ஒரு திரைப்படம் கூட இதுவரை வெளியாகாத நிலையிலும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்திற்கு பிறகு தொடர்ந்து இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த நிலைக்கு சூறாவளி போல சென்று கொண்டிருக்கிறார்.

பொங்கலுக்கு ரிலீஸ்
பேட்ட திரைப்படத்தில் கவனிக்க கூடிய முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன் இப்பொழுது கதாநாயகியாக விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்க திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரானா சூழ்நிலை காரணமாக திரையரங்கங்கள் திறக்கப்படாததால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

ஹீரோ
மாஸ்டர் திரைப்படம் வெளியான உடனேயே அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி விட வேண்டும் என மனக்கணக்கு போட்டு வந்த மாளவிகாவின் மனக்கோட்டை இப்பொழுது சுக்குநூறாக உடைந்து இருக்கும் நிலையில், கைவசம் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்து வரும் ஹீரோ திரைப்படம் மட்டுமே இருக்கிறது.

மூன்றாம் முறையாக
பேட்ட மற்றும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து இருக்கும் மாளவிகா உடன் இப்பொழுது மூன்றாம் முறையாக பிரபல இந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ள நிலையில் அதை தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய இயக்குனர் இயக்க ஷாகித் கபூர், விஜய் சேதுபதி லீட் ரோலில் நடிக்கின்றனர். இது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் உறுதியான செய்தி என சொல்லப்படுகிறது.

மாஸாக போஸ்
இவ்வாறு மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் விரைவில் இந்தி என அடுத்தடுத்த நிலைக்கு புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி சமூக வலைத் தளத்தில் வெளியிடும் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வந்ததைத் தொடர்ந்து இப்பொழுது ஹாலிவுட் ஹீரோயின் லுக்கில் மொத்தமும் பிளாக் அண்ட் பிளாக்கில் மாஸாக போஸ் கொடுத்திருக்கும் மாளவிகா மோகனனின் இந்த வியக்க வைக்கும் போட்டோ இப்பொழுது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.