பைக்கில் கெத்தா போஸ் கொடுத்த மாளவிகா மோகன்.மாமா வா ஒரு ரவுண்டு கூப்ட்டு போ மாலு.கொஞ்சும் ரசிகர்கள் !
சென்னை : மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
அதைத் தொடர்ந்து, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷுடன் இணைந்து D43 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மிகக்குறுகிய காலத்தில்
மலையாளத்தில் வெளியான பட்டம் போல படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ்சினிமாவில்கலக்கிக் கொண்டு இருக்கிறார் மாளவிகா மோகன். ஏராளமான ரசிகர்கள் மிகக்குறுகிய காலத்திலேயே கிடைத்துவிட 2வது படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்து.

வசூல் சாதனை
மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாகி ரசிகர்களின் பேரதரவை பெற்றுத்தந்ததோடு பல வசூல் சாதனைகளையும் புரிந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு பிறகு மாளவிகா மோகனனின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து போக இந்தியிலும் படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.
Recommended Video

டி43 படத்தில்
விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் முதன்முறையாக இணைந்து பணியாற்றும் மெகா பட்ஜெட் வெப்சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் மாளவிகா மோகனன் இதற்கு முன்பாகவே பியான்ட் த கிளவுட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து ஹிந்தியில் அறிமுகம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.மேலும்இயக்குனர் கார்த்திக் நரேன்,தனுஷ் முதன்முறையாக இணைந்திருக்கும் டி 43 படத்தில் நடித்து வருகிறார்.

ப்ரியா இருந்தா வாங்களேன்
தனது அழகால் ரசிகர்களை தன் பக்கம் தக்கவைத்துக்கொண்டு அல்லி ராஜ்ஜியம் நடத்தி வரும் மாளவிகா மோகனன், இணையத்தில் அவ்வப்போது புகைப்படத்தை அப்லோடு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது இவர், ராயல் என்ஃபீல்டு பைக்கில் கெத்தாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ப்ரியா இருந்தா வாங்களேன் ஒரு ரைடு போலாம் என்றும், மாமா வா ஒரு ரவுண்ட் கூப்டு போ மாலு என்றும் அவரை கொஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











